Page Loader
இந்தியா vs பாகிஸ்தான் போட்டியின் போது இணையத்தின் கவனத்தை ஈர்த்த ஹர்திக் பாண்டியாவின் காதலி ஜாஸ்மின் வாலியா
ஹர்திக் பாண்டியாவின் காதலி என்று கூறப்படும் இங்கிலாந்து பாடகி ஜாஸ்மின் வாலியா

இந்தியா vs பாகிஸ்தான் போட்டியின் போது இணையத்தின் கவனத்தை ஈர்த்த ஹர்திக் பாண்டியாவின் காதலி ஜாஸ்மின் வாலியா

எழுதியவர் Venkatalakshmi V
Feb 24, 2025
06:28 pm

செய்தி முன்னோட்டம்

துபாயில் நடந்த இந்தியா vs பாகிஸ்தான் போட்டியின் போது ஹர்திக் பாண்டியாவின் காதலி என்று கூறப்படும் இங்கிலாந்து பாடகி ஜாஸ்மின் வாலியாவின் வீடியோ வைரலானது. போட்டியினை நேரடியாக காண வந்த அவர், அரங்கத்தில் இருந்த போது இந்திய அணிக்காக உற்சாகப்படுத்திய விதம் தற்போது வைரலாகி வருகிறது. ஏற்கனவே, இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா, இங்கிலாந்து பாடகி ஜாஸ்மின் வாலியாவுடன் டேட்டிங் செய்வதாக வதந்தி பரவி வரும் நிலையில் இந்த வீடியோ யூகங்களுக்கு மேலும் வலு சேர்கிறது. இந்த வீடியோ இணையத்தில் வெளியானவுடன், ரசிகர்கள் உச்சமாக ஷேர் செய்து வருகின்றனர். முன்னதாக ஜாஸ்மினின் இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் அவர் துபாயில் தற்போது இருப்பதாக கூறி ஒரு புகைப்படத்தை பதிவிட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

வதந்திகள்

ஜாஸ்மின் மற்றும் ஹார்திக்கின் டேட்டிங் வதந்திகள்

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், ரெடிட் பயனர்கள் ஜாஸ்மின் மற்றும் ஹார்திக் பாண்டியா இருவரும் தனித்தனியாக கிரீக் நகருக்கு சுற்றுலா சென்ற போல ஒரே இடத்திலிருந்து புகைப்படத்தை பதிவிட்டு இருந்தனர். இது டேட்டிங் வதந்திகளைத் தூண்டியது. ஹார்திக் மற்றும் நடாஷா விவாகரத்து அறிவித்த ஒரு மாதத்திற்குப் பிறகு இது நடந்தது. விவாகரத்து அறிக்கையில் அதில் "நான்கு வருடங்கள் ஒன்றாக வாழ்ந்த பிறகு, ஹார்திக் மற்றும் நான் பரஸ்பரம் பிரிந்து செல்ல முடிவு செய்துள்ளோம்" என தெரிவித்தனர்.

யார் அந்த ஜாஸ்மின்

ஜாஸ்மின் வாலியா பற்றி விவரங்கள்

பிரிட்டிஷ் பாடகியும் தொலைக்காட்சி ஆளுமையுமான ஜாஸ்மின் ஆங்கிலம், பஞ்சாபி மற்றும் இந்தி மொழிகளில் சுயாதீன இசையை வெளியிட்டுள்ளார். அவர் ஜாக் நைட்டுடன் இணைந்து வெளியிட்ட பாம் டிக்கி பாடல்(2017) மூலம் புகழ் பெற்றார். பின்னர் சோனு கே டிட்டு கி ஸ்வீட்டி(2018)இல் தோன்றினார். அவர் தி ஒன்லி வே இஸ் எசெக்ஸ் (2010) இல் தொடங்கி அப்போதைய காதலன் ரோஸ் வோர்ஸ்விக் உடன் தேசி ராஸ்கல்ஸ் 2 (2015)இல் இணைந்தார். 2014இல் தனது யூடியூப் சேனலைத் தொடங்கிய அவர், ஜாக் நைட் போன்ற கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றினார். அவரது தனிப்பாடல்களில் டம் டீ டீ டம் (2016), கேர்ள் லைக் மீ(2016), டெம்பிள் (2017) மற்றும் கோ டவுன் (2017) ஆகியவை அடங்கும்.