
பா.ரஞ்சித்தின் உதவி இயக்குனர் விடுதலை சிகப்பி மீது பாய்ந்த கிரிமினல் வழக்குகள்
செய்தி முன்னோட்டம்
பா.ரஞ்சித்தின் உதவி இயக்குனராக இருப்பவர் விடுதலை சிகப்பி.
இவர், சமீபத்தில், சென்னையில் R.A.புரத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது, இந்து கடவுள்களான ராமர், சீதை, அனுமன் ஆகியோரை பற்றி அவதூறாக பேசியதாக கூறப்பட்டது.
அந்த சர்ச்சையான பேச்சு குறித்த வீடியோ வெளியானதும், பாஜக மற்றும் இந்து முன்னணி அமைப்பினர், விடுதலை சிகப்பி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
தொடர்ச்சியாக, பாரத் இந்து முன்னணி அமைப்பின் சென்னை மாவட்ட தலைவர் சுரேஷ் என்பவர் சார்பில் விடுதலை சிகப்பி மீது, சென்னை கமிஷனரிடமும், அபிராமபுரம் காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டது.
அதனையடுத்து, கலகத்தை தூண்டுதல், குறிப்பிட்ட மதத்தை புண்படுத்துதல் உட்பட 5 பிரிவுகளின் கீழ், விடுதலை சிகப்பி மீது வழக்கு பதிந்துள்ளனர் போலீசார்.
ட்விட்டர் அஞ்சல்
பா.ரஞ்சித்தின் உதவி இயக்குனர் மீது பாய்ந்த வழக்கு
#JUSTIN | பா.ரஞ்சித்தின் உதவி இயக்குநர் மீது வழக்கு பதிவு #PaRanjith | #ViduthalaiSigappi | #BharathHinduMunnani pic.twitter.com/YW88OGzRwx
— PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) May 9, 2023