
50 years of Rajini: ரஜினிக்கு ட்ரிபியூட் வீடியோ 'கூலி'யில் இடம்பெறுகிறது!
செய்தி முன்னோட்டம்
சில காட்சிகள் நீக்கப்பட்டும், வசன மாற்றங்கள் இருந்தபோதிலும், CBFC, ரஜினிகாந்தின் வரவிருக்கும் படமான 'கூலி'க்கு 'A' சான்றிதழ் அளித்துள்ளது. இது போக, மதுபான பிராண்டின் பெயரை மாற்றுவது, மது அருந்துதல் எச்சரிக்கையைச் சேர்ப்பது மற்றும் பிற படங்களின் பாடல்களைப் பயன்படுத்துவதற்கு NOC பெறுவது ஆகியவை பிற மாற்றங்களில் அடங்கும். இந்த மாற்றங்களைச் செய்த பிறகு, 'கூலி'க்கு, 'ஏ' சான்றிதழ் கிடைத்துள்ளது. இருப்பினும், படத்தின் தொடக்கத்தில் ரஜினிகாந்தின் 50 ஆண்டுகால சினிமா வாழ்க்கைக்கு, 25 வினாடிகள் நீளமான அனிமேஷன் அஞ்சலியைச் சேர்க்க தயாரிப்பாளர்கள் CBFC-ஐ அணுகினர். இதை சேர்த்ததால், ரன்னிங் டைம் 2 மணி நேரம் 49 நிமிடங்களிலிருந்து, 2 மணி நேரம் 50 நிமிடங்களாக நீண்டது என பாலிவுட் ஹங்கமா தெரிவித்துள்ளது.
வெளியீட்டு விவரங்கள்
'கூலி' திரைப்படம் அதிகாலை முதல் தேர்ந்தெடுக்கப்பட்ட திரையரங்குகளில் திரையிடப்படும்
அதிரடி ஆக்ஷன் நிறைந்த இந்த 'coolie' படம், 'வார் 2' படத்துடன் மோத உள்ளது. எனினும் இந்திய அளவில் 'கூலி' அதன் வெளியீட்டிற்கு முன்பே, முன்பதிவில் பெரிய அளவில் வசூல் செய்து வருகிறது. கேரளா மற்றும் கர்நாடகாவில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட திரையரங்குகளில் ஆகஸ்ட் 14 ஆம் தேதி காலை 6:00 மணி முதல் கூலி திரையிடப்படும். அதே நேரத்தில் உள்ளூர் கட்டுப்பாடுகள் காரணமாக தமிழ்நாட்டில் காலை 9:00 மணி வரை காத்திருக்க வேண்டியிருக்கும். கேரளாவில் இன்று, செவ்வாய்க்கிழமை காலை 10:30 மணிக்கு முன்பதிவுகள் திறக்கப்பட்டன.