Page Loader
22 ஆண்டுகளுக்குப் பிறகு, நடிகை சௌந்தர்யாவின் விமான விபத்துக்கு மூத்த தெலுங்கு நடிகர் மீது புகார்
நடிகை சௌந்தர்யாவின் விமான விபத்துக்கு மூத்த தெலுங்கு நடிகர் மீது புகார்

22 ஆண்டுகளுக்குப் பிறகு, நடிகை சௌந்தர்யாவின் விமான விபத்துக்கு மூத்த தெலுங்கு நடிகர் மீது புகார்

எழுதியவர் Venkatalakshmi V
Mar 12, 2025
01:09 pm

செய்தி முன்னோட்டம்

நடிகை சௌந்தர்யா விமான விபத்தில் இறந்து 22 ஆண்டுகள் முடிந்து விட்டது. இந்த வழக்கில், தெலுங்கு மூத்த நடிகர் மோகன் பாபு மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்துக்கு மோகன் பாபு தான் காரணம் என்று சமூக ஆர்வலர் ஒருவர் புகார் அளித்துள்ளார். தென்னிந்திய திரைப்படத் துறையில் பிரபல நடிகையான சௌந்தர்யா, ஏப்ரல் 17, 2004 அன்று நடந்த விமான விபத்தில் இறந்தார், இந்த விபத்தில் அப்போதைய ஆந்திர முதல்வர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டியும் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

புகார்

நடிகர் மோகன் பாபு திட்டமிட்டு கொலை செய்ததாக புகார் 

கம்மம் மாவட்டம், கம்மம் கிராமப்புற மண்டலத்தில் உள்ள சத்யநாராயணபுரம் கிராமத்தைச் சேர்ந்த அந்த ஆர்வலர், இந்த சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்தி, ஏதேனும் மோசடி நடந்ததா என்பதைக் கண்டறிய வேண்டும் என்று காவல்துறையை அணுகியுள்ளார். மேலும், மஞ்சு மோகன் பாபு தன்னை 'மிரட்டல்' செய்ததாகவும், தனக்கு உயிருக்கு பாதுகாப்பு வழங்குமாறு காவல்துறையிடம் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், தனது புகார் கடிதத்தில், மோகன் பாபு, ஷம்ஷாபாத்தின் ஜல்லேபள்ளியில் உள்ள ஆறு ஏக்கர் விருந்தினர் மாளிகையை விற்குமாறு மறைந்த நடிகர் சௌந்தர்யாவிடம் கேட்டதாகவும், அதற்கு அவரது சகோதரர் அமர்நாத் மறுத்துவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். அதனால் மோகன் பாபு விபத்தை ஏற்படுத்தி அவர்களை கொலை செய்ததாக சந்தேகிப்பதாக அவர் கூறுகிறார்.

விசாரணை

விபத்து குறித்து விசரணையை கோரும் புகார்தாரர்

விபத்து நடந்த நேரத்தில், கர்ப்பிணியாக இருந்ததாகக் கூறப்படும் சௌந்தர்யாவும் அவரது சகோதரரும் தெலுங்கானாவை தளமாகக் கொண்ட ஒரு கட்சிக்காக பிரச்சாரம் செய்வதற்காக பெங்களூருவிலிருந்து பயணம் செய்து கொண்டிருந்தபோது, ​​ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தனர் என்பது பலரும் அறிந்த தகவல். எனினும், இந்த விபத்து சம்பவம் எந்த உறுதியான ஆதாரத்தையும் விட்டுச் செல்லவில்லை. தற்போது சம்மந்தப்பட்ட விருந்தினர் மாளிகையை மோகன் பாபு பயன்படுத்தி வருவதாகவும், அதனை அரசாங்கம் கையகப்படுத்த வேண்டும் எனவும், மோகன் பாபு மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.