LOADING...
'ஓப்பன்ஹைமர்' படத்திற்காக கோல்டன் குளோப்ஸ் 2024 விருதை வென்றனர் ராபர்ட் டவுனி ஜூனியர், சிலியன் மர்பி

எழுதியவர் Venkatalakshmi V
Jan 08, 2024
08:39 am

செய்தி முன்னோட்டம்

2024 ஆம் ஆண்டிற்கான கோல்டன் குளோப் விருதுகள் தற்போது நடைபெற்று வருகிறது. அறிவிக்கப்பட்டவரை, கிறிஸ்டோபர் நோலனின் 'ஓப்பன்ஹைமர்' படத்தில் நடித்ததற்காக, சிறந்த நடிகராக சிலியன் மர்பியும், சிறந்த துணை நடிகருக்கான 81வது கோல்டன் குளோப் விருதை ராபர்ட் டவுனி ஜூனியரும் வென்றனர். இதன் மூலம், ராபர்ட் டவுனி ஜூனியர் தனது மூன்றாவது கோல்டன் குளோபை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கிறிஸ்டோபர் நோலனின் 'ஓப்பன்ஹைமர்' படத்தில் லூயிஸ் ஸ்ட்ராஸாக நடித்ததற்காக சிறந்த துணை நடிகருக்கான பிரிவில் அவர் இந்த விருதை பெறுகிறார். நெட்பிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியான கிரௌன் என்ற வெப்தொடரில், இங்கிலாந்து இளவரசி டயானா கதாபாத்திரத்தில் தத்ரூபமாக நடித்தமைக்காக லிசபெத் டெபிக்கி-க்கு சிறந்த நடிப்புக்கான விருது வழங்கப்பட்டது.

ட்விட்டர் அஞ்சல்

கோல்டன் குளோப்ஸ் 2024

ட்விட்டர் அஞ்சல்

கோல்டன் குளோப்ஸ் 2024

Advertisement