அடுத்த செய்திக் கட்டுரை

'சித்தா' திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகும் தேதி அறிவிப்பு
எழுதியவர்
Sindhuja SM
Nov 11, 2023
03:04 pm
செய்தி முன்னோட்டம்
'பண்ணையாரும் பத்மினியும்' புகழ், S .U .அருண்குமார் இயக்கத்தில் நடிகர் சித்தார்த் நடிப்பில் உருவாகிய திரைப்படம் 'சித்தா'.
இயக்குனர் அருண்குமார் இயக்கத்தில் நடிகர் சித்தார்த், அஞ்சலி நாயர் உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.
எட்டாக்கி என்டர்டைன்மெண்ட் தயாரிக்கும் இந்த படத்திற்கு திபு நிணன் தாமஸ் மற்றும் விஷால் சந்திரசேகர் ஆகியோர் இசையமைத்துள்ளனர்.
இப்படம் செப்டம்பர் 28ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிய நிலையில், தற்போது இப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் சித்தார்த் நடிப்பில் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் வெற்றி பெற்ற 'சித்தா' திரைப்படம் நவம்பர் 17ஆம் தேதி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#Chithha on Hostar from November 17th pic.twitter.com/ng4cROCBXc
— Karthik Ravivarma (@Karthikravivarm) November 10, 2023