NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / சிரஞ்சீவியின் முன்னாள் மருமகன் சிரிஷ் பரத்வாஜ் உடல்நலக் குறைவால் காலமானார்
    அடுத்த செய்திக் கட்டுரை
    சிரஞ்சீவியின் முன்னாள் மருமகன் சிரிஷ் பரத்வாஜ் உடல்நலக் குறைவால் காலமானார்
    சிரிஷ் பரத்வாஜ் சிரஞ்சீவியின் இளைய மகள் ஸ்ரீஜா கொனிடேலாவை மணந்தவர் ஆவர்

    சிரஞ்சீவியின் முன்னாள் மருமகன் சிரிஷ் பரத்வாஜ் உடல்நலக் குறைவால் காலமானார்

    எழுதியவர் Venkatalakshmi V
    Jun 19, 2024
    04:10 pm

    செய்தி முன்னோட்டம்

    தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் சிரஞ்சீவியின் முன்னாள் மருமகன் சிரிஷ் பரத்வாஜ் புதன்கிழமை காலை எதிர்பாராதவிதமாக மரணமடைந்தார் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

    அவர் இறக்கும் போது ஹைதராபாத்தில் உள்ள ஒரு பிரபல மருத்துவமனையில் நுரையீரல் நோய்க்கான சிகிச்சையில் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    சரியான காரணம் தெரியவில்லை என்றாலும், சில நெருங்கியவர்கள் சமூக ஊடக தளங்களில் மாரடைப்பு என்று தெரிவித்துள்ளனர்.

    சிரிஷ் பரத்வாஜ் சிரஞ்சீவியின் இளைய மகள் ஸ்ரீஜா கொனிடேலாவை மணந்தவர் ஆவர்.

    கடந்த கால சர்ச்சை

    சிரிஷ் பரத்வாஜின் சர்ச்சைக்குரிய திருமணம்

    விவரம் அறியாதவர்களுக்கு, சிரிஷ் பரத்வாஜூம், சிரஞ்சீவியின் மகள் ஸ்ரீஜாவை 2007இல் திருமணம் செய்து கொண்டார்.

    கல்லூரி காலத்திலேயே காதலிக்க தொடங்கிய இவர்கள் இருவரின் திருமணத்திற்கும் பெற்றோர்கள் சம்மதிக்காத காரணத்தால், சென்னைக்கு ஓடி வந்து திருமணம் செய்துகொண்டனர்.

    இந்த விவகாரம் அப்போது பெரும் சர்ச்சையை தூண்டியது. இந்த திருமணத்தை நிறுத்துவதற்காக சிரஞ்சீவி சென்னைக்கு விரைந்து வந்தபோதும், நிறுத்த முடியாத காரணத்தால் நொந்து போய் ஹைதராபாத்திற்கே திரும்பியதாகவும் கூறப்பட்டது.

    இருப்பினும், இவர்களின் திருமணம் சிறிது காலமே நீடித்தது.

    இவர்களுக்கு நிவ்ரதி என்ற மகள் பிறந்த பிறகு, 2011இல் இருவரும் விவாகரத்து செய்தனர். அதன்பிறகு, ஸ்ரீஜா தாய் வீட்டிற்கே திரும்பினார்.

    விவாகரத்துக்கு பின்

    விவாகரத்துக்குப் பிறகு சிரிஷ் பரத்வாஜின் வாழ்க்கை

    ஸ்ரீஜாவிடமிருந்து விவாகரத்து பெற்ற பிறகு, சிரிஷ் பரத்வாஜ் மறுமணம் செய்துகொண்டு வழக்கறிஞர் பணியினை தொடர்ந்ததாக கூறப்படுகிறது.

    சில ஆண்டுகளுக்கு முன்பு பாரதிய ஜனதா கட்சியில் (பாஜக) அவர் சேர்ந்தார். ஆனால் கட்சியில் அதிகம் செயல்படாததால் அவரது அரசியல் வாழ்க்கை பெரிதாக மேம்படவில்லை.

    அவரது முந்தைய திருமணத்தைச் சுற்றியுள்ள சர்ச்சைகள் இருந்தபோதிலும், விவாகரத்துக்குப் பிறகு அவர் சிரஞ்சீவியின் குடும்பத்துடன் இணக்கமான உறவைப் பேணி, சர்ச்சையற்ற வாழ்க்கையை நடத்தினார்.

    அவரது அகால மரணம் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தெலுங்கு திரையுலகம்
    தெலுங்கு படங்கள்

    சமீபத்திய

    ஜம்மு, சம்பா, பதான்கோட் பகுதிகளில் பாகிஸ்தானிய ட்ரோன்கள்; அமிர்தசரஸை உலுக்கிய பலத்த வெடி சத்தம் ஜம்மு காஷ்மீர்
    ஜங்க் ஃபுட் விரும்பி உண்பவரா நீங்கள்? உங்களுக்கு ஷாக் கொடுக்கும் சுகாதார நிபுணர்கள் மன அழுத்தம்
    இந்தியா-பாகிஸ்தான் பதட்டத்திற்கு ராணுவ தலைவர் அழைக்கவிருக்கும் பொதுமக்களோடு கலந்திருக்கும் பிராந்திய இராணுவம் யார்? இந்திய ராணுவம்
    பாகிஸ்தானின் ஆபத்பாந்தவன் அமெரிக்கா இப்போது உதவ மறுப்பது ஏன்? பாகிஸ்தான்

    தெலுங்கு திரையுலகம்

    நடிகர் துல்கர் சல்மான் பிறந்தநாள்: அவர் நடிப்பில் வெளியான சூப்பர்ஹிட் திரைப்படங்கள் துல்கர் சல்மான்
    தெலுங்கு நடிகர் சிரஞ்சீவிக்கு முழங்கால் அறுவை சிகிச்சை நடிகர்
    இசையமைப்பாளர் அனிருத் காட்டில் மழை; ஷாருக்கானை தொடர்ந்து, ஒரு மெகாஸ்டார் படத்தில் இணைகிறார் அனிருத்
    தெலுங்கு திரையுலகில், முதல் 'சிறந்த நடிகர்'-க்கான தேசிய விருதை வென்றுள்ளார் அல்லு அர்ஜுன் தேசிய விருது

    தெலுங்கு படங்கள்

    விபத்தில் சிக்கிய புஷ்பா 2 படக்குழு! அதிர்ச்சியில் ரசிகர்கள்  தெலுங்கு திரையுலகம்
    என்னது பாகுபலி படத்திற்கு 400 கோடி ரூபாய் கடன்வாங்கப்பட்டதா? வெளிப்படுத்திய ராணா டகுபதி தமிழ் திரைப்படம்
    ஜூலை 14 ஆம் தேதி, தெலுங்கில் வருகிறான் மாமன்னன்  உதயநிதி ஸ்டாலின்
    RRR 2: RRR திரைப்படத்தின் சீக்குவல் வெளியாகவுள்ளதாக தகவல்  திரைப்படம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025