Page Loader
'காட்பாதர்' படத்தை தொடர்ந்து மீண்டும் மோகன்ராஜா இயக்கத்தில் சிரஞ்சீவி இணைகிறார்
விஸ்வம்பரா' திரைப்படத்தில் பிஸியாக இருக்கும் சிரஞ்சீவி இதற்கு ஓகே சொல்லிவிட்டாராம்

'காட்பாதர்' படத்தை தொடர்ந்து மீண்டும் மோகன்ராஜா இயக்கத்தில் சிரஞ்சீவி இணைகிறார்

எழுதியவர் Venkatalakshmi V
May 20, 2024
02:45 pm

செய்தி முன்னோட்டம்

பிரபல இயக்குனர் மோகன் ராஜா, ஏற்கனவே தெலுங்கில் தனது முத்திரையை பதித்துள்ளார். அவர் இயக்கத்தில் 2022ஆம் ஆண்டு வெளியான 'காட்பாதர்' திரைப்படம் பெரும் வெற்றி பெற்றதை அடுத்து, மீண்டும் சிரஞ்சீவி உடன் கைகோர்க்க உள்ளார். பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்த மலையாளப் ஹிட் திரைப்படமான லூசிஃபரின் (2019) ரீமேக் தான் பிளாக்பஸ்டர் படமான காட்பாதர். தற்போது 'விஸ்வம்பரா' திரைப்படத்தில் பிஸியாக இருக்கும் சிரஞ்சீவி இதற்கு ஓகே சொல்லிவிட்டாராம். சிரஞ்சீவியின் மகள் சுஷ்மிதா கொனிடேலா தனது கணவர் விஷ்ணு பிரசாத் உடன் கோல்ட் பாக்ஸ் எண்டர்டெயின்மென்ட் மூலம் இப்படத்தை பெரிய அளவில் தயாரிக்கவுள்ளார். தற்போது மோகன் ராஜா 'தனி ஒருவன் 2' படவேலைகளில் பிஸியாக இருக்கிறார். அதனைத்தொடர்ச்சியாக சிரஞ்சீவி படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

embed

Twitter Post

మళ్ళీ ఆ డైరక్టర్ తోనే చిరు నెక్ట్స్ ప్రాజెక్ట్.. కూతురి కోసం సాహసం..#chiranjeevi #vishwambhara #mohanraja #sushmitha https://t.co/GWLF2bumgx— Asianetnews Telugu (@AsianetNewsTL) May 20, 2024