"ரஜினிகாந்ததை விமர்சித்தது பெரும் தவறு..மன்னிப்பு கேட்க வேண்டும்": சந்திரபாபு நாயுடு ட்வீட்
நடிகர் ரஜினிகாந்த் சமீபத்தில் NTR-இன் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டார். அந்நிகழ்ச்சியில் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர், சந்திரபாபு நாயுடுவும் கலந்துகொண்டார். அப்போது பேசிய ரஜினி, சந்திரபாபு நாயுடு, தொலைநோக்கு பார்வையுடன் செயல்படுவதாக பாராட்டினார். ரஜினியின் பேச்சை கடுமையாக விமர்சித்தார், YSR காங்கிரஸ் கட்சியின் மந்திரியும், நடிகையுமான ரோஜா செல்வமணி. தொடர்ந்து, "ரஜினிகாந்தை பெரிய அளவில் கற்பனை செய்து கொண்டிருந்தோம், ஆனால் தற்போது அவர் பூஜ்ஜியமாகி விட்டார்," என்றும் கடுமையாக சாடினார். இதனிடையே, சந்திரபாபு நாயுடு, "YSR காங்கிரஸ் நிர்வாகிகள் யாரையும் தவறாக ரஜினிகாந்த் பேசாதபோது, அவரை பற்றி பொதுவெளியில் இதுபோல தகாத வார்த்தைகள் பயன்படுத்தி விமரித்தது பெருந்தவறு. இதற்காக அக்கட்சி மன்னிப்பு கேட்கவேண்டும்" என ஒரு நீண்ட பதிவை ட்விட்டரில் இட்டுள்ளார்.