அடுத்த செய்திக் கட்டுரை
உடல் நலம் தேறி வருவதாக பாடகி பாம்பே ஜெயஸ்ரீ ட்வீட்
எழுதியவர்
Venkatalakshmi V
May 15, 2023
06:27 pm
செய்தி முன்னோட்டம்
கர்நாடக இசை கலைஞரும், பாடகியுமான பாம்பே ஜெயஸ்ரீ கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் இசை நிகழ்ச்சி மற்றும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இங்கிலாந்து நாட்டின் லிவர்பூல் நகருக்கு சென்றுள்ளார்.
அப்போது ஹோட்டலில் தங்கியிருந்த 58 வயதாகும் இவருக்கு, திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டதால் அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்கள்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், அவரது மூளையில் ரத்த கசிவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட அவரது உடல்நிலை குறித்த அப்டேட் ஒன்றை அவரே தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அதன்படி, "உங்கள் உங்கள் அனைவரின் ஆசிகள் மற்றும் பிரார்த்தனைகளுடன், நான் நன்றாக தேறி வருகிறேன். தொடர்ந்து ஆசி வழங்குங்கள்" என கூறியுள்ளார்.