
அட்லி திரைப்படத்தில் இணையும் கமல்ஹாசன்?
செய்தி முன்னோட்டம்
தமிழ் சினிமாவில் முதன்முதலில் ஆயிரம் கோடி வசூல் செய்த திரைப்படத்தை இயக்கியவர் என்ற சாதனையை, சமீபத்தில் ஷாருக்கானின் ஜவான் திரைப்படத்தை இயக்கியதன் மூலம் அட்லி படைத்தார்.
இதனைத் தொடர்ந்து, அவர் அடுத்து இயக்கும் படங்கள் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்தது.
மேலும், விஜய்-ஷாருக்கான் இணைந்து நடிக்கும் படத்தை தான் இயக்குவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும், சில ஹாலிவுட் தயாரிப்பு நிறுவனங்களும் தன்னுடன் பேசி வருவதாக, இயக்குனர் அட்லி சமீபத்தில் தெரிவித்து இருந்தார்.
இது குறித்த பரபரப்பு அடங்குவதற்குள், கமலஹாசனை அட்லி இயக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
2nd card
கமலிடம் கதை சொன்ன அட்லி
இயக்குனர் அட்லி உலக நாயகன் கமல்ஹாசனை சமீபத்தில் சந்தித்து, அவரிடம் கதை சொன்னதாக, சினிமா வட்டாரங்களில் தகவல் பரவிவருகிறது.
சம்பளம் மற்றும் பிற விவரங்கள் முடிவு செய்யப்பட்டு, கமலஹாசன் விரைவில் ஒப்பந்தம் செய்யப்படுவார் எனவும் கூறப்படுகிறது.
மேலும், இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வரும் வாரங்களில் வெளியாகலாம் என தெரிகிறது.
இருப்பினும் கமலஹாசன், விஜய்-ஷாருக்கான் நடிக்கும் படத்தில் இணைவாரா, அல்லது ஹாலிவுட் படத்தில் இணைவாரா என்ற தகவல் இன்னும் உறுதியாக வில்லை.
கமலஹாசன் தற்போது இந்தியன் 2, இந்தியன் 3, கல்கி 2898 கி.பி, தக் லைஃப், மற்றும் ஹெச்.வினோத்தின் திரைப்படம் உள்ளிட்டவற்றை கைவசம் வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.