Page Loader
"உங்கள் உழைப்பு": தேசிய விருது பதக்கத்தை திருப்பி அளித்த திருடர்கள்
திருடர்கள் செய்த இந்த செயல் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது

"உங்கள் உழைப்பு": தேசிய விருது பதக்கத்தை திருப்பி அளித்த திருடர்கள்

எழுதியவர் Venkatalakshmi V
Feb 13, 2024
10:41 am

செய்தி முன்னோட்டம்

'காக்கா முட்டை' மற்றும் 'கடைசி விவசாயி' படங்களை இயக்கியதற்காக தேசிய விருது வென்றவர் இயக்குனர் மணிகண்டன். தேனி மாவட்டத்தில் உள்ள அவரது வீட்டில் கடந்த வாரம் கொள்ளையர்கள் ரூ.1 லட்சம் ரொக்க பணம், 5 பவுன் தங்க நகை மற்றும் 2 தேசிய விருது பதக்கங்கள் ஆகியற்றை திருடி சென்றனர். இது குறித்து காவல்துறையினர் விசாரணை செய்துவரும் நிலையில், இந்த தகவல் இணையத்தில் வைரலாக பரவியது. இந்த நிலையில் நேற்று,"அய்யா எங்களை மன்னித்துவிடுங்கள். உங்கள் உழைப்பு உங்களுக்கு" என்ற மன்னிப்பு கடிதத்துடன், தேசிய விருதை கதவில் தொங்கவிட்டு சென்றுள்ளனர் திருடர்கள். 'நாங்கள் திருடர்கள் தான்..அனாலும் எங்களுக்கு என்று பாலிஸி உண்டு' என்பது போல திருடர்கள் செய்த இந்த செயல் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

சூப்பர் திருடர்கள்