
பாலிவுட் தம்பதி கியாரா அத்வானி மற்றும் சித்தார்த் மல்ஹோத்ராவிற்கு பெண் குழந்தை பிறந்தது
செய்தி முன்னோட்டம்
பாலிவுட் நடிகர்களான கியாரா அத்வானி மற்றும் சித்தார்த் மல்ஹோத்ரா தம்பதியினருக்கு செவ்வாய்க்கிழமை (ஜூலை 15) பெண் குழந்தை பிறந்தது. ரிலையன்ஸ் மருத்துவமனையில் மாலையில் சுகப்பிரசவம் நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆண்டின் தொடக்கத்தில், பிப்ரவரியில், இந்த ஜோடி ஒரு இனிமையான இன்ஸ்டா பதிவின் மூலம் தாங்கள் பெற்றோர் ஆகவிருப்பதை அறிவித்தது. "எங்கள் வாழ்க்கையின் மிகப்பெரிய பரிசு. விரைவில் வருகிறது (sic)" என்று தலைப்பிட்டு ஒரு புகைப்படத்தை வெளியிட்டிருந்தனர். சித்தார்த் மல்ஹோத்ராவும் கியாரா அத்வானியும் பிப்ரவரி 2023 இல் ராஜஸ்தானில் ஒரு அரண்மனை ரீசார்ட்டில் திருமணம் செய்து கொண்டனர்.
படங்கள்
தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயமான படங்கள்
கியாரா அத்வானி மற்றும் சித்தார்த் மல்ஹோத்ரா இருவரும், பிரபல இயக்குனர் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் வெளியான 'ஷேர்ஷா' படத்தில் நடிக்கும் போது காதல் வயப்பட்டனர். அதன் பின்னர் கியாரா அத்வானி, இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான 'கேம் சேஞ்சர்' படத்தில் நாயகியாக நடித்தவர். அடுத்ததாக அவர், ஹ்ரித்திக் ரோஷன், ஜூனியர் NTR நடிப்பில் வெளியீட்டிற்கு தயாராக இருக்கும் 'வார் 2' படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இதற்கிடையில், ஜான்வி கபூருக்கு ஜோடியாக சித்தார்த் மல்ஹோத்ரா நடித்துள்ள 'பரம் சுந்தரி' ஜூலை 25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.