NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / பிக்பாஸ் தமிழ் சீசன் 8: விறுவிறுப்பை கூட்ட களமிறங்கும் வைல்ட் கார்டு போட்டியாளர்கள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    பிக்பாஸ் தமிழ் சீசன் 8: விறுவிறுப்பை கூட்ட களமிறங்கும் வைல்ட் கார்டு போட்டியாளர்கள்
    விறுவிறுப்பை கூட்ட களமிறங்கும் வைல்ட் கார்டு போட்டியாளர்கள்

    பிக்பாஸ் தமிழ் சீசன் 8: விறுவிறுப்பை கூட்ட களமிறங்கும் வைல்ட் கார்டு போட்டியாளர்கள்

    எழுதியவர் Venkatalakshmi V
    Oct 21, 2024
    09:25 am

    செய்தி முன்னோட்டம்

    பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில், தீபாவளி பண்டிகைக்கு தொடர்பாக 5 வைல்ட் கார்டு போட்டியாளர்கள் களமிறக்கப்படுவதாக தகவல் கசிந்துள்ளது.

    விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி அக்டோபர் மாத துவக்கத்தில் ஒளிபரப்பாக துவங்கியது.

    18 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியினை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார்.

    ஆரம்பத்தில் விஜய் சேதுபதியின் தொகுத்து வழங்கும் திறன் குறித்து சந்தேகங்களை எழுப்பிய நேயர்கள், அவர் பொட்டில் அடித்தார் போல ஹவுஸ்மேட்ஸை கேள்வி கேட்கும் ஸ்டைலை தற்போது வெகுவாக ரசிக்க துவங்கிவிட்டனர்.

    வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது கமலின் ஸ்டைல் என்றால், வெட்டு ஒன்று துண்டு ரெண்டு என கேள்வி கேட்டு விடை பெறுவது VJS ஸ்டைல்

    வைல்ட் கார்டு

    3 வைல்ட் கார்டு போட்டியாளர்கள்

    நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாளிலேயே சாச்சனா அதிரடியாக வெளியேறிய நிலையில், ஒரே வாரத்தில் அவர் மீண்டும் வைல்ட் கார்டு-ஆக திரும்பினார்.

    அதன்பின்னர் நடந்த வீக்எண்டு எவிக்ஷனில் வெளியேறினார் 'ஃபாட்மேன்' ரவீந்தர்.

    ஆண்கள் அணி, பெண்கள் அணி என பிரிக்கப்பட்ட வீட்டில் பெரிதாக சுவாரசிய நிகழ்வுகள் ஏதும் இல்லாததால், விரைவில் வைல்ட்கார்டு போட்டியாளர்களை இறக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

    தற்போது, தீபாவளி ஸ்பெஷலாக 5 புதிய போட்டியாளர்கள் களமிறக்கப்படுவதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது எனவும் கூறப்படுகிறது.

    வைல்ட் கார்டு போட்டியாளர்களில், சீரியலில் நாயகியாக நடித்த திவ்யா ஸ்ரீதர் (அர்னவின் மனைவி), விஜய் டிவியின் முன்னணி நடிகர்கள் டிஎஸ்கே, வினோத் பாபு, மற்றும் நடிகை ஐஸ்வர்யா பாஸ்கரன் ஆகியோர் ஆவர். மற்றொரு போட்டியாளர் குறித்த தகவல் இல்லை.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பிக் பாஸ் தமிழ்
    விஜய் டிவி

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    பிக் பாஸ் தமிழ்

    பிக் பாஸ் தமிழ் சீசன் 7 அறிவிப்பு, இன்று இரவு, 7:07 மணிக்கு வெளியாகிறது  விஜய் டிவி
    காதலியை கரம்பிடித்து கவின்; பிக்பாஸ் லாஸ்லியாவின் ரியாக்ஷன் நடிகர்
    பிக்பாஸ் -7 வரும் அக்டோபர் 1-ஆம் தொடங்கும் என தகவல் விஜய் டிவி
    இன்று தொடங்குகிறது பிக் பாஸ் சீசன் 7- போட்டியாளர்கள் இதோ விஜய் டிவி

    விஜய் டிவி

    உடல் எடை குறைந்ததன் ரகசியம் உடைத்த ரோபோ ஷங்கர்  ரோபோ ஷங்கர்
    நடிகர் கவினுக்கு விரைவில் திருமணம்; மணப்பெண் குறித்து வெளியான தகவல்  நடிகர்
    பிரபல தொகுப்பாளினி DD, விஜய் டிவியை விட்டு விலகிய காரணத்தை கூறினார் சின்னத்திரை
    'பிக் பாஸ்' சீசன் 7 : அக்டோபர் 1ம் தேதி முதல் ஆரம்பம்  கமல்ஹாசன்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025