Loading...
பிக் பாஸ் 10-ல் கிரிக்கெட் வீரர் முரளி விஜய்? செப்டம்பர் 6-ல் தொடங்கும் 21 போட்டியாளர்கள் கொண்ட சீசன் 10
பிக் பாஸ் தமிழ் சீசன் 10 வரும் செப்டம்பர் 6-ம் தேதி மாலை 6 மணிக்கு பிரம்மாண்டமாக தொடங்க உள்ளது

பிக் பாஸ் 10-ல் கிரிக்கெட் வீரர் முரளி விஜய்? செப்டம்பர் 6-ல் தொடங்கும் 21 போட்டியாளர்கள் கொண்ட சீசன் 10

எழுதியவர் Venkatalakshmi V
Sep 02, 2026
09:47 am

செய்தி முன்னோட்டம்

தமிழ் சின்னத்திரை ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையே பிக் பாஸ் தமிழ் சீசன் 10 வரும் செப்டம்பர் 6-ம் தேதி மாலை 6 மணிக்கு பிரம்மாண்டமாக தொடங்க உள்ளது. நடிகர் விஜய் சேதுபதி இந்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கவுள்ள நிலையில், விஜய் தொலைக்காட்சி மற்றும் ஜியோ ஹாட்ஸ்டார் தளங்களில் இது ஒளிபரப்பாகவுள்ளது. இம்முறை பலதரப்பட்ட துறைகளைச் சேர்ந்த 21 பேரின் பெயர்கள் சாத்தியமான போட்டியாளர்களின் பட்டியலில் அடிபடுகின்றன. ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா, நடிகை பிரியா ராமன், சீரியல் நடிகைகள் ஜனனி அசோக், ஃபரினா, ஹேமா ராஜ்குமார், நடிகர்கள் ஆரியன், புவியரசு, நவீன், குரைஷி மற்றும் திரைப்பட விமர்சகர் பிரசாந்த் உள்ளிட்டோர் பிக் பாஸ் வீட்டிற்குள் செல்ல வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முரளி விஜய்

முன்னாள் கிரிக்கெட் வீரர் முரளி விஜய்யின் பங்கேற்பு

இந்த சீசனின் மிகப்பெரிய ஆச்சரியமாக முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் முரளி விஜய்யின் பெயர் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

விளையாட்டு உலகை சேர்ந்த ஒரு முன்னணி பிரபலம் பிக் பாஸ் போட்டியில் பங்கேற்பது இதுவே முதல் முறை என்பதால், போட்டியின் சுவாரஸ்யமும் ரசிகர்களின் எதிர்பார்ப்பும் பலமடங்கு அதிகரித்துள்ளது.

பிரபலங்கள் மட்டுமின்றி, பொதுமக்களிலிருந்து போட்டியாளர்களைத் தேர்வு செய்யும் பிக்பாஸ் காமன்மேன் மூலம் முனியம்மா, கரிஷ்மா மற்றும் ஜேசன் கௌஷி ஆகிய 3 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

பொதுமக்களும் பிரபலங்களும் ஒரே கூரையின் கீழ் போட்டியிடவுள்ளது இந்த 10-வது சீசனின் முக்கிய சிறப்பம்சமாகும்.

தற்போது பரவி வரும் 21 பேர் கொண்ட பட்டியல் அதிகாரப்பூர்வமானது இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT