பணப்பெட்டியில் புதிய ட்விஸ்ட்; ஹவுஸ்ட்மேட்ஸ்களுக்கு தமிழ் பிக் பாஸ் கொடுத்த பொங்கல் பரிசு
செய்தி முன்னோட்டம்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி 100வது நாளை எட்டியுள்ள நிலையில், பிரபலமான பணப்பெட்டி டாஸ்க் புதிய ட்விஸ்ட் ஒன்றுடன் வந்துள்ளது.
வழக்கமாக, பணப்பெட்டி வரும் போது அதன் விலையை ஏற்றும் பிக் பாஸ், அதை எடுத்துப் போகும் ஹவுஸ்மேட்ஸ் வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என்ற நிபந்தனை விதிப்பார்.
ஆனால் இந்த முறையிலோ, புதுமையான மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த சீசனில், பணப்பெட்டியை எடுத்த நபர் வீட்டிலேயே தொடர அனுமதிக்கப்படுவார்.
ஆனால், அவருக்கு ஒரு கடின நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. அதாவது பணப்பெட்டியை எடுத்தவுடன் குறிப்பிட்ட நேரத்திற்குள் வீட்டுக்குள் திரும்ப வேண்டும். இல்லையெனில், அவர் வெளியேற்றப்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பணப்பெட்டி
பணப்பெட்டியை எடுக்கப்போவது யார்?
இந்த ட்விஸ்ட் ஹவுஸ்மேட்ஸ் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி, விளையாட்டின் கோணத்தை முற்றிலும் மாற்றி அமைத்திருக்கிறது.
ரயான், முன்னரே பணப்பெட்டியை எடுத்துச் செல்வதுதான் திட்டம் எனக் கூறியிருந்த நிலையில், தற்போது பிக் பாஸ் சூப்பரான வாய்ப்பைக் கொடுத்துள்ள நிலையில், பணப்பெட்டியை எடுப்பதில் தீவிரம் காட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது தொடர்பான ப்ரோமோ வீடியோவில் பணப்பெட்டி குறித்த விதிமுறையை முத்துக்குமரன் வாசிப்பதுபோல் வெளியிடப்பட்டுள்ளது.
இது பொங்கல் பரிசாக ஹவுஸ்மேட்ஸ்களுக்கு கொடுத்த ஜாக்பாட் என ரசிகர்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
இதற்கிடையே, ரசிகர்கள் முத்துக்குமார் தான் டைட்டில் வின்னர் என நம்பிக்கை தெரிவித்து சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
ட்விட்டர் அஞ்சல்
பிக் பாஸ் தமிழ் 100வது நாள் ப்ரோமோ
#Day100 #Promo2 of #BiggBossTamil
— Vijay Television (@vijaytelevision) January 14, 2025
Bigg Boss Tamil Season 8 - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason8 #VJStheBBhost #VijaySethupathi @mynanduonline #AalumPudhusuAattamumPudhusu #BiggBossTamil #பிக்பாஸ் #Disneyplushotstartamil #VijayTelevision #VijayTV pic.twitter.com/havZobzsX0