பிக் பாஸ் 8 வெற்றியாளர் முத்துக்குமரன் மீது பெண் பகீர் குற்றச்சாட்டு: சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரல்
செய்தி முன்னோட்டம்
சின்னத்திரையின் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக் பாஸ் தமிழ் சீசன் 8-ன் வெற்றியாளர் முத்துக்குமரன் மீது பெண் ஒருவர் திடுக்கிடும் பாலியல் மற்றும் ஏமாற்று குற்றச்சாட்டுகளை முன்வைத்து வீடியோ வெளியிட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கையை சேர்ந்த முத்துக்குமரன், வானொலி நிகழ்ச்சிகள் மற்றும் புத்தக வாசிப்பு மூலம் தனது பேச்சாற்றலை வளர்த்துக்கொண்டு வாய்ஸ் ஓவர் கலைஞராக தனது பயணத்தைத் தொடங்கினார். விஜய் டிவியின் 'தமிழ் பேச்சு எங்கள் மூச்சு' நிகழ்ச்சி மூலம் பிரபலமான இவர், தனது தமிழ் புலமையாலும் சமூக அக்கறையுள்ள கருத்துகளாலும் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ரசிகர்களின் அமோக ஆதரவோடு டைட்டில் வின்னராக வாகை சூடினார்.
குற்றச்சாட்டு
பெண் வெளியிட்ட பகீர் வீடியோ குற்றச்சாட்டு
இந்நிலையில், சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்ட பெண் ஒருவர், கடந்த அக்டோபர் 4 ஆம் தேதி முத்துக்குமரனை சந்தித்ததாகவும், அவர் தன்னை வற்புறுத்தி காரில் தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றதாகவும் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே தனக்கு திருமணமாகி குழந்தையுடன் பிரிந்து வாழும் சூழலை அறிந்திருந்தும், திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறித் தன்னுடன் நெருக்கமாக இருந்துவிட்டு, மறுநாள் முதல் தன்னை தவிர்க்கத் தொடங்கிவிட்டதாக அந்தப் பெண் குற்றம் சாட்டியுள்ளார்.
சம்பந்தப்பட்ட வீடியோ வெளியான சில மணி நேரங்களிலேயே நீக்கப்பட்டது.
இருப்பினும், முத்துக்குமரனும் அந்தப் பெண்ணும் இருக்கும் மற்றொரு வீடியோ இணையத்தில் வெளியாகிப் பரவி வருகிறது.
இச்சம்பவம் குறித்து முத்துக்குமரன் தரப்பில் இன்னும் அதிகாரப்பூர்வ விளக்கம் அளிக்கப்படாத நிலையில்,இச்சம்பவம் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
So, #BiggBossTamil fame #Muthukumaran has apparently asked her to remove those videos, and now she has released this. If what she has said is true, this is deeply disturbing. You cannot play with a woman's emotions, give her hope, make her believe in something, use her for your… https://t.co/KDM5CCs3Ae pic.twitter.com/6Cn5Wzp6EA
— Harish M (@chnmharish) October 8, 2026
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
Wahidha makes sensational allegations against Tamil Bigg Boss winner #Muthukumaran, claiming that she was cheated by him.
— PK UMAMAHESH (@PKBeastvijay) October 8, 2026
Maatikittan Muthu 🙄🙄
🔥 This issue looks set to create more sensation in the days to come! #Muthukumaran pic.twitter.com/PqoHH6IqpS