
நடிகர் விஜய் குறித்து பீஸ்ட் வில்லன் நடிகர் ஷைன் டாம் சர்ச்சை பேச்சு
செய்தி முன்னோட்டம்
மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ, நடிகர் விஜயை விமர்சித்து பேசியது தற்போது சர்ச்சைக்குள்ளாகி உள்ளது.
சமீபத்தில் ஒரு பேட்டியில் ஷைன் டாம், நடிகர் விஜய்'ன் நடிப்பு மற்றும் சம்பளம் குறித்து பேசியது தற்போது வைரலாகி வருகிறது.
அந்த பேட்டியில், விஜய்யின் நடிப்பை பிரபல நடிகர்களான மோகன்லால், மம்முட்டி மற்றும் கமல்ஹாசன் ஆகியோருடன் ஒப்பிட்டுப் பேசினார் ஷைன் டாம் சாக்கோ.
மேலும் அந்த பேட்டியில், அவர்களைப் போல் விஜய்க்கு திறமை இல்லாத போதிலும், அவர்களை விட அதிக ஊதியம் பெறுவதாக கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
card 2
பாலின ஊதிய வேறுபாடு குறித்து சாக்கோ
விஜய்க்கும், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவிற்க்கும் இடையே உள்ள பாலின ஊதிய வேறுபாடு குறித்து சாக்கோவிடம் கேட்கப்பட்டபோது, பாலினத்திற்கு அப்பாற்பட்ட ஊதிய இடைவெளியை அவர் வலியுறுத்தினார்.
ஊதியம் என்பது நடிப்புத் திறன் உட்பட பல்வேறு அம்சங்களை தாண்டி வழங்கப்படுகிறது என குறை கூறினார்.
அவர், "விஜய் எவ்வளவு சம்பளம் வாங்குகிறார்? மம்முட்டி மற்றும் மோகன்லால் எவ்வளவு சம்பளம் வாங்குகிறார்கள்? இவர்களை விட விஜய் சிறந்தவரா? கமல்ஹாசனை விட விஜய் சிறந்தவரா? எனவே, இது திறன்களைப் பற்றியது அல்ல. நடிகனாக இருந்தாலும் சரி, நடிகையாக இருந்தாலும் சரி பாலினத்திற்கு அப்பாற்பட்டது." எனக்கூறியுள்ளார்.
இவரின் பேச்சிற்கு விஜய் ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
card 3
இதற்கு முன்னரும் விஜயை சீண்டியுள்ள ஷைன்
விஜய் குறித்த தனது கருத்துக்காக ஷைன் டாம் சாக்கோ, விமர்சனங்களை எதிர்கொள்வது இது முதல் முறை அல்ல.
இதற்கு முன்பு கூட, பீஸ்ட் படத்தில் விஜய்யின் நடிப்பை அவர் விமர்சித்துள்ளார்.
குறிப்பாக ஒரு காட்சியில் நடிகர் விஜய் அவரைத் தூக்க வேண்டிய இருந்தது.
அது குறித்து, ஷைன் டாம் சாக்கோ கூறியது, "பொதுவாக, ஒருவர் எடையை தூக்கும்போது முகத்தில் உள்ள சிரமத்தை நீங்கள் பார்க்கலாம். ஆனால் விஜய் அப்படி எதையும் முகத்தில் காட்டவில்லை. அதுக்கு விஜய் சார் குறை சொல்ல முடியாது. படக்குழு தான் காரணம்." என கூறினார்.
இந்த கருத்துக்கு அதன் பின்னர் அவர் வருத்தம் தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
விஜயை சீண்டியுள்ள ஷைன்
Of course they are better actors than Vijay! ஆனா Shine Tom Chacko என்ன சொல்றான்னு தெரியாம smileys தூக்கிட்டு வந்திட்ட! எவனாவது மலையாளம் தெரிஞ்சவங்கிட்ட கேட்டு confirm பண்ணிட்டாவது வந்திருக்கலாம், அதெப்பிடிடா அஜித் fans பாதிக்குமேல முட்டாளாவே இருக்கிறீங்க?? 🤣🤣🤣🤣🤣 https://t.co/dwXUdRc5gO
— Tizan (@ajax511) December 17, 2023