
பாஸ்கர் சக்தியின் 'வடக்கன்' படம் பெயர் மாற்றம் செய்யப்பட்டது
செய்தி முன்னோட்டம்
எழுத்தாளர் பாஸ்கர் சக்தி இயக்கத்தில் உருவாகியுள்ள 'வடக்கன்' திரைப்படத்தின் பெயரை 'ரயில்' என மாற்றியுள்ளனர்.
முன்னதாக கடந்த மே 24 ஆம் தேதி இத்திரைப்படம் வெளியாகவிருந்த நிலையில், 'வடக்கன்' என்ற தலைப்புக்கு சென்சார் போர்டு அனுமதி மறுத்ததால், படத்தினை வெளியிட முடியவில்லை.
இதனால் ரிலீஸ் தள்ளி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து தற்போது படத்தின் பெயரை மாற்றியுள்ளது படக்குழு. விரைவில் புதிய வெளியீட்டு தேதி அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளது.
எழுத்தாளரும் கதை, வசனகர்த்தாவுமான பாஸ்கர் சக்தி, இயக்குநராக அறிமுகமாகும் இந்த படத்தில் குங்குமராஜ், வைரமாலா ஆகியோர் முன்னணி வேடத்தில் நடித்துள்ளனர்.
இவர்களுடன் ரமேஷ் வைத்யா, பர்வேஸ் மெஹ்ரூ, சமிரா என பலர் நடித்துள்ள இந்தப் படத்தை டிஸ்கவரி சினிமாஸ் சார்பில் மு.வேடியப்பன் தயாரித்துள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
'வடக்கன்' படம் பெயர் மாற்றம்
#CinemaBytes | பிரபல எழுத்தாளர் பாஸ்கர் சக்தி இயக்கியுள்ள ‘வடக்கன்’ படத்தின் பெயரை ‘ரயில்’ என மாற்றி படக்குழு அறிவிப்பு!#SunNews | #BaskerSakthi | #Rail pic.twitter.com/izuHh3zMNq
— Sun News (@sunnewstamil) June 3, 2024