Page Loader
சூர்யா எனது சகோதரர், மீண்டும் இணைவோம்- இயக்குனர் பாலா தகவல்
இயக்குனர் பாலாவும், நடிகர் சூர்யாவும் ஏற்கனவே 3 படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளனர்.

சூர்யா எனது சகோதரர், மீண்டும் இணைவோம்- இயக்குனர் பாலா தகவல்

எழுதியவர் Srinath r
Nov 06, 2023
02:53 pm

செய்தி முன்னோட்டம்

டெவில் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பங்கேற்ற இயக்குனர் பாலா, சூர்யாவுடன் மீண்டும் இணைந்து பணியாற்ற வாய்ப்புள்ளதாக தெரிவித்தார். அண்மையில் நடந்த டெவில் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில், சிறப்பு விருந்தினராக இயக்குனர் பாலா பங்கேற்றார். அப்போது அவரிடம் நடிகர் சூர்யாவுடன் மீண்டும் இணைய வாய்ப்புள்ளது குறித்து கேட்கப்பட்டது. அதற்கு அவர் சூர்யா தனது சகோதரர் எனவும், மீண்டும் சூரியாவுடன் இணைய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார். இயக்குனர் பாலா மற்றும் சூர்யா இணைந்து நந்தா, பிதாமகன் மற்றும் அவன் இவன் திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் என மூன்று படங்களில் பணியாற்றியுள்ளனர். இவர்கள் நான்காவதாக வணங்கான் திரைப்படத்திற்காக இணைவதாக இருந்தது. இந்நிலையில் சூர்யா மற்றும் பாலாவுக்கு இடையே ஏற்பட்ட வேறுபாடுகளால் சூர்யா படத்திலிருந்து விலகுவதாக அறிவித்தார்.

2nd card

அருண் விஜய் நடிக்கும் வணங்கான் திரைப்படம்

நடிகர் சூர்யா எந்த விதமான சர்ச்சைகளை கிளப்பாமல், சுமூகமாக வணங்கான் திரைப்படத்திலிருந்து வெளியேறினார். மேலும் இயக்குனர் பாலாவும், சூர்யாவின் முடிவை அங்கீகரித்தார். இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பாலாவின் பதில், சூர்யா மற்றும் பாலா இடையே எந்த விதமான பிரச்சினையும் இல்லை என்பதை உணர்த்துகிறது. சூர்யா வெளியேறிய பின்னர் வணங்கான் படத்தில் நடிக்க அருண் விஜய் ஒப்பந்தமானார். அவருக்கு ஜோடியாக ரோஷினி பிரகாஷ் நடிக்கிறார். சமீபத்தில் அருண் விஜய் சேரும் சகதியுடனும், ஒரு கையில் பெரியார் சிலைடனும், மற்றொரு கையில் பிள்ளையார் சிலையுடனும் நிற்கும் படத்தின் பர்ஸ்ட் லுக் காட்சி வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.