
நாளை வெளியாகிறது 'அயலான்' திரைப்படத்தின் முக்கிய அப்டேட்
செய்தி முன்னோட்டம்
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் தயாராகி வரும் அயலான் திரைப்படத்தின் முக்கிய அப்டேட் நாளை வெளியாகும் என அத்திரைப்படத்தின் வெளியீட்டு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியிட்டுள்ளது.
இயக்குனர் ஆர் ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங், யோகி பாபு, கருணாகரன், பானுப்பிரியா என நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடிக்கின்றனர். ஏ ஆர் ரகுமான் இசையமைக்கிறார்.
இப்படம் ஒரு சயின்ஸ் பிரிக்ஷன் படமாக தயாராகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் பட குழு ஏற்கனவே அயலான் திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என தகவல் வெளியிட்டு இருந்தது.
தற்போது இப்படத்தின் முக்கிய அப்டேட் நாளை வெளியாகும் என பட வெளியீட்டு நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
பட வெளியிட்டு நிறுவனம் வெளியிட்டுள்ள அப்டேட்
Get ready for an exciting surprise tomorrow❤️🔥 #Ayalaan 👽🛸 #AyalaanFromPongal #AyalaanFromSankranti@Siva_Kartikeyan @TheAyalaan @arrahman @Ravikumar_Dir @24amstudios @Phantomfxstudio @Gangaentertains @Rakulpreet @ishakonnects @SharadK7 @iYogiBabu #Karunakaran #Niravshah… pic.twitter.com/dyNtOMh0iO
— KJR Studios (@kjr_studios) October 1, 2023