லால் சலாம் இசை வெளியீட்டு விழாவிற்கு தேதி குறிச்சாச்சு! வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு
ரஜினிகாந்த், விக்ராந்த், விஷ்ணு விஷால் நடிப்பில், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி இருக்கும் திரைப்படம் 'லால் சலாம்'. இந்த படத்தில், மொய்த்தீன் பாய் என்ற கதாபாத்திரத்தில் கௌரவ வேடத்தில் நடித்துள்ளார் ரஜினிகாந்த். இந்த திரைப்படம் முதலில், பொங்கல் வெளியீடாக வருவதாக எதிர்பார்க்கப்பட்டது. பின்னர், ரேஸில் இருந்து பின்வாங்கி, பிப்ரவரி 9 ஆம் தேதி வெளியிடுவது என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, வரும் ஜனவரி 26 ஆம் தேதி, சென்னையிலுள்ள சாய் ராம் கல்லூரியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது, ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிடுகிறது. ஸ்ட்ரீட் கிரிக்கெட் மற்றும் மதத்தை பற்றி பேசும் படமாக இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.