Page Loader
இயக்குனர் அட்லீயின் அடுத்த படத்தில் சல்மான் கான் நடிக்கலாம் எனத்தகவல்

இயக்குனர் அட்லீயின் அடுத்த படத்தில் சல்மான் கான் நடிக்கலாம் எனத்தகவல்

எழுதியவர் Venkatalakshmi V
Jun 17, 2024
03:39 pm

செய்தி முன்னோட்டம்

'ஜவான்' திரைப்பட வெற்றிக்கு பிறகு, இயக்குனர் அட்லீ மற்றும் நடிகர் அல்லு அர்ஜுன் இடையேயான மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படம் தற்போது கிடப்பில் போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் அட்லீயின் சம்பளம் தயாரிப்பாளருக்கு கட்டுப்படியாகாத காரணத்தால் கைவிடப்பட்டது எனவும் கூறப்படுகிறது. அதற்கு பதிலாக, அட்லீ இப்போது பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான்கானுடன் இணைவதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறார் எனத்தகவல் வெளியாகியுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த புதிய திட்டத்திற்கான ஸ்கிரிப்டை அட்லீ தற்போது எழுதி வருகிறார். இதற்கிடையே, சல்மான்கான் தற்போது முருகதாஸ் இயக்கத்தில் 'சிக்கந்தர்' படத்தில் நடித்து வருவதால், அதன் பின்னரே அட்லீ படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என கூறப்படுகிறது. இந்த செய்தி சமூக ஊடக தளத்தில் பரவவே ரசிகர்களிடையே உற்சாக அலையைத் தூண்டியுள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

அட்லீயின் அடுத்த படத்தில் சல்மான் கான்