Page Loader
நடிகர் அருண் விஜய்- இயக்குனர் பாலாவின் வணங்கான் டீஸர் வெளியானது
முன்னதாக வணங்கான் திரைப்படத்தில், நடிகர் சூர்யா தான் முதலில் நடிப்பதாக இருந்தது

நடிகர் அருண் விஜய்- இயக்குனர் பாலாவின் வணங்கான் டீஸர் வெளியானது

எழுதியவர் Venkatalakshmi V
Feb 19, 2024
05:22 pm

செய்தி முன்னோட்டம்

இயக்குனர் பாலாவின் இயக்கத்தில், முதல்முறையாக அருண் விஜய் இணைந்துள்ள திரைப்படம் 'வணங்கான்'. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சில மாதங்களுக்கு முன்னர் வெளியான நிலையில், படத்தின் டீஸர் இன்று வெளியாகியுள்ளது. ராமேஸ்வரம், கன்னியாகுமரி மாவட்டத்தை சுற்றி இக்கதை நகர்வதை போல படமாக்கப்பட்டுள்ளது. முன்னதாக வணங்கான் திரைப்படத்தில், நடிகர் சூர்யா தான் முதலில் நடிப்பதாக இருந்தது. ஆனால், பாலாவிற்கு, சூர்யாவிற்கும், திரைக்கதையில் சமரசம் எட்டாத நிலையில், சூர்யா படத்தில் இருந்து விலகுவதாக தெரிவித்தார். அதனை தொடர்ந்து, அதே படத்தில், அருண் விஜயை ஹீரோவாக வைத்து படவேலைகள் மளமளவென துவக்கப்பட்டது. இப்படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிக்க, ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படத்தில் ரோஷினி பிரியன் கதாநாயகியாக நடிக்கிறார்.