Page Loader
'மறக்குமா நெஞ்சம்' ஏஆர் ரஹ்மான் இசைநிகழ்ச்சி: ஈமெயில் அனுப்ப நாளையே கடைசி நாள்
'மறக்குமா நெஞ்சம்' ஏஆர் ரஹ்மான் இசைநிகழ்ச்சி: ஈமெயில் அனுப்ப நாளையே கடைசி நாள்

'மறக்குமா நெஞ்சம்' ஏஆர் ரஹ்மான் இசைநிகழ்ச்சி: ஈமெயில் அனுப்ப நாளையே கடைசி நாள்

எழுதியவர் Venkatalakshmi V
Sep 26, 2023
06:55 pm

செய்தி முன்னோட்டம்

இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மானின் இசைநிகழ்ச்சியான 'மறக்குமா நெஞ்சம்', பலருக்கும் 'மறக்காதுப்பா நெஞ்சம்' என கூறும் அளவிற்கு கசப்பான அனுபவத்தை தந்தது. சரியாக ஏற்பாடுகள் செய்யப்படாமல், ஒருங்கிணைப்பாளர்கள் கவனக்குறைவால், பல்வேறு குற்றசாட்டுகளை எதிர்கொண்டது. இதற்காக மன்னிப்பு கேட்ட ஏஆர் ரஹ்மான், டிக்கெட் இருந்தும், நிகழ்ச்சியை பார்க்க முடியாமல் போனவர்களை, தனது PR -இன் மின்னஞ்சல் முகவரிக்கு, டிக்கெட் நகல் மற்றும் குறைகளை பட்டியலிட்டு மெயில் அனுப்புமாறு கேட்டுக்கொண்டார். கூடவே நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் மின்னஞ்சல் முகவரியையும் இணைத்திருந்தார். இவர்களுக்கு பணத்தை திருப்பி அனுப்பி வைப்பதாக வாக்குறுதி அளிக்கப்பட்டது. இந்த நிலையில், நாளையே மின்னஞ்சல் அனுப்ப கடைசி தேதியன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை, 1000 பேருக்கு பணம் திரும்ப அனுப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

ஏஆர் ரஹ்மான் இசைநிகழ்ச்சி