NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / மலைக்கா அரோராவுடன் பிரேக்-அப் செய்த பிரபல நடிகர் அர்ஜுன் கபூர் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    மலைக்கா அரோராவுடன் பிரேக்-அப் செய்த பிரபல நடிகர் அர்ஜுன் கபூர் 
    அர்ஜுன் கபூர் பாலிவுட்டில் பிரபல நடிகராவார்

    மலைக்கா அரோராவுடன் பிரேக்-அப் செய்த பிரபல நடிகர் அர்ஜுன் கபூர் 

    எழுதியவர் Venkatalakshmi V
    Oct 29, 2024
    12:57 pm

    செய்தி முன்னோட்டம்

    மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர். இவரின் முதல் திருமணத்தின் மூலம் பிறந்தவர்கள் அர்ஜுன் கபூர் மற்றும் அன்ஷுலா கபூர்.

    இதில் அர்ஜுன் கபூர் பாலிவுட்டில் பிரபல நடிகராவார்.

    இவரும், நடிகை மலைக்கா அரோராவும் காதலித்து வந்தனர்.

    தன்னை விட வயதில் மூத்தவராக இருந்த மலைக்காவுடனான காதல் பற்றி அர்ஜுன் கபூர் மீது பல்வேறு கருத்துக்கள் வைக்கப்பட்டாலும், அவர் அதை பொருட்படுத்தவில்லை.

    இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக அவர்கள் இருவரும் பிரிந்துவிட்டதாக செய்திகள் வெளிவந்த வண்ணம் இருந்தது.

    இது குறித்து சம்மந்தப்பட்ட இருவரும் கருத்து தெரிவிக்காமல் இருந்த நிலையில் தற்போது அர்ஜுன் அதை பற்றி பேசியுள்ளார்.

    வரலாறு

    தான் சிங்கிள் எனக்கூறிய அர்ஜுன் கபூர்

    திங்கட்கிழமை மும்பை சிவாஜி பூங்காவில் ராஜ் தாக்கரே தொகுத்து வழங்கிய தீபாவளி விருந்தில், ஊடகங்களுடன் உரையாடும் போது, அருகிலிருந்து யாரோ மலைக்கா பேரை கூற, அர்ஜுன், "இல்லை, நான் இப்போது தனிமையில் இருக்கிறேன். ரிலாக்ஸ்" என்று கூறினார்.

    பாப்பராசி வீடியோ சிறிது நேரத்தில் வைரலானது. தீபாவளி விருந்தில் அவரது சக நடிகர்களான அஜய் தேவ்கன், டைகர் ஷெராஃப் மற்றும் இயக்குனர் ரோஹித் ஷெட்டி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

    2017ல் நடிகை அர்பாஸ் கானை விவாகரத்து செய்த பிறகு, அர்ஜுன் கபூரும் மலாக்கா அரோராவும் 2018ல் டேட்டிங் செய்யத் தொடங்கினர்.

    2019ல் அர்ஜுன் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த மலாய்கா அவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தைப் போட்டபோது, ​​அவர்கள் தங்கள் உறவை இன்ஸ்டாவில் அதிகாரப்பூர்வமாக்கினர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பாலிவுட்
    ஸ்ரீதேவி

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    பாலிவுட்

    பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவனின் சகோதரர், இயக்குனர் சங்கீத் சிவன் காலமானார் இயக்குனர்
    AR முருகதாஸ் இயக்கத்தில், 'சிகந்தர்' படத்தில் சல்மான்கானுக்கு ஜோடியாகிறார் ராஷ்மிகா மந்தனா  ரஷ்மிகா மந்தனா
    பிரபல பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த் இதயம் தொடர்பான பிரச்சனைகளுக்காக மருத்துவமனையில் அனுமதி நடிகைகள்
    'ஜவான்' படத்திற்கு பிறகு மற்றுமொரு ஷாருக்-அனிருத் காம்போ! அனிருத்

    ஸ்ரீதேவி

    நடிகை ஸ்ரீதேவியின் பிறந்தநாளுக்கு டூடுல் மூலம் வாழ்த்து தெரிவித்த கூகுள் சினிமா
    ஸ்ரீதேவி மரணம், ஜான்வி கபூர் பிறப்பு குறித்து மௌனம் கலைத்தார் போனி கபூர் பாலிவுட்
    நடிகர் சூர்யாவுடன் ஜோடி சேரும் நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் நடிகர் சூர்யா
    மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் காதலிக்கும் நபர் இவர்தான்  பாலிவுட்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025