
4 நாளில் ரூ.22 கோடி வசூல் செய்தது அரண்மனை 4 திரைப்படம்
செய்தி முன்னோட்டம்
இயக்குநர் சுந்தர் சி எழுதி, இயக்கி, நடித்துள்ள அரண்மனை 4 திரைப்படம் 4 நாளில் ரூ.22 கோடி வசூல் செய்துள்ளது.
தமன்னா, ராஷி கண்ணா, யோகிபாபு, வி.டி.வி கணேஷ், டெல்லி கணேஷ் மற்றும் கோவை சரளா ஆகியோரும் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்த படம் பாக் என்ற புதிய பேயை அறிமுகப்படுத்துகிறது.
அரண்மனை 4 படத்தின் கதையை சுந்தர் சி எழுதி இயக்கியுள்ளார். இப்படத்திற்கு ஹிப்ஹாப் தமிழா இசையமைத்துள்ளார்.
அரண்மனை
முதல் நாளில் ரூ.4.65 கோடி வசூல்
ஒளிப்பதிவாளர் இ கிருஷ்ணமூர்த்தி ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு ஃபென்னி ஆலிவர் படத்தொகுப்பையும் செய்துள்ளனர்.
சுந்தர் சி-யின் மனைவியும், நடிகர்-அரசியல்வாதியுமான குஷ்பு இப்படத்தை தயாரித்துள்ளார்.
இப்படம் வெளியான முதல் நாளில் ரூ.4.65 கோடி வசூலித்த நிலையில், தற்போது அது ரூ.22 கோடி வசூலித்துள்ளது.
இந்த வருடம் தமிழ் சினிமாவில் வெளியான முதல் பிளாக்பஸ்டர் திரைப்படம் என்று இதற்கு பாராட்டுகள் குவிந்து கொண்டிருந்தாலும், இதில் பெரிதாக கதை ஒன்றும் இல்லை என்று விமர்சகர்கள் விமர்சித்து வருகின்றனர்