NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / 'மறக்குமா நெஞ்சம்' இசை நிகழ்ச்சி குறித்த சர்ச்சைகளுக்கு பதிலளித்த ஏ.ஆர்.ரஹ்மான்
    'மறக்குமா நெஞ்சம்' இசை நிகழ்ச்சி குறித்த சர்ச்சைகளுக்கு பதிலளித்த ஏ.ஆர்.ரஹ்மான்
    பொழுதுபோக்கு

    'மறக்குமா நெஞ்சம்' இசை நிகழ்ச்சி குறித்த சர்ச்சைகளுக்கு பதிலளித்த ஏ.ஆர்.ரஹ்மான்

    எழுதியவர் Venkatalakshmi V
    September 11, 2023 | 12:55 pm 1 நிமிட வாசிப்பு
    'மறக்குமா நெஞ்சம்' இசை நிகழ்ச்சி குறித்த சர்ச்சைகளுக்கு பதிலளித்த ஏ.ஆர்.ரஹ்மான்
    'மறக்குமா நெஞ்சம்' இசை நிகழ்ச்சி குறித்த சர்ச்சைகளுக்கு பதிலளித்த ஏ.ஆர்.ரஹ்மான்

    சினிமாவில் நுழைந்து 30 ஆண்டுகள் நிறைவானதை கொண்டாடும் விதமாக 'இசைப்புயல்' ஏ.ஆர்.ரஹ்மான், கடந்த ஆகஸ்ட் 12 ஆம் தேதி, சென்னையில் ஒரு இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார். சென்னை தொடங்கி, உலகம் முழுவதும் இசைநிகழ்ச்சி நடத்த திட்டம் வைத்திருந்தார். ஆனால், ஆகஸ்ட் மாதம் எதிர்பாராத விதமாக மழை பெய்யவே, அந்த நிகழ்ச்சி, நேற்று, (செப்டம்பர்-10) ஒத்திவைக்கப்பட்டது. சென்னையின் ECR-ல் அமைந்துள்ள ஒரு திறந்தவெளி ஆடிட்டோரியத்தில் நடைபெற்ற இந்த விழாவிற்கு, பிளாட்டினம், டைமண்ட், கோல்ட் என பலவித டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டன. இதன் விலை, ரூ.2000-ரூ.15000 வரை நிர்ணையிக்கப்பட்டிருந்தது. தனியார் தளத்தில் இந்த நிகழ்ச்சியின் டிக்கெட்டுகள் விற்கப்பட்டன.

    ரசிகர்களுக்கு பதிலளித்த ஏ.ஆர்.ரஹ்மான் 

    இந்த நிலையில், நேற்று நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள், கூட்டத்தை சமாளிக்க முறையான ஏற்பாடுகள் செய்யவில்லை என கண்டங்கள் எழுந்தன. இதனால், டிக்கெட் இருந்தும், அமர இடம் இல்லாத சூழல் ஏற்பட்டது. அதோடு, அதிக கூட்டம் கூடியதால், டிக்கெட் வைத்திருந்த பலரும் திருப்பி அனுப்பப்பட்டனர் எனவும், ரஹ்மானின் பெயரை பயன்படுத்தி தங்களை ஏமாற்றிவிட்டதாக பலரும் முறையிடவே, தற்போது ரஹ்மான், "அன்புள்ள சென்னை மக்களே, உங்களில் டிக்கெட் வாங்கியவர்கள் மற்றும் துரதிர்ஷ்டவசமான சூழ்நிலைகளால் நுழைய முடியாமல் போனவர்கள், தயவு செய்து உங்கள் டிக்கெட் வாங்கிய நகலை arr4chennai@btos.in என்ற மின்னஞ்சலுக்கு உங்கள் குறைகளுடன் பகிர்ந்து கொள்ளவும். எங்கள் குழு விரைவில் பதிலளிப்பார்கள்" என ட்வீட் செய்துள்ளார்.

    ஏ.ஆர்.ரஹ்மான் ட்வீட் 

    Dearest Chennai Makkale, those of you who purchased tickets and weren’t able to enter owing to unfortunate circumstances, please do share a copy of your ticket purchase to arr4chennai@btos.in along with your grievances. Our team will respond asap🙏@BToSproductions @actcevents

    — A.R.Rahman (@arrahman) September 11, 2023
    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஏஆர் ரஹ்மான்
    வைரல் செய்தி
    வைரலான ட்வீட்

    சமீபத்திய

    ஏஆர் ரஹ்மான்

    ஏ.ஆர்.ரஹ்மானின் 'மறக்குமா நெஞ்சம்' இசைநிகழ்ச்சி குறித்து ரசிகர்கள் குமுறல்; நடந்தது என்ன? இசையமைப்பாளர்
    மீண்டும் ஒரு முறை தமிழ் பற்றை மேடையில் நிரூபித்த ஏ.ஆர்.ரஹ்மான்  இசையமைப்பாளர்
    மழையால் பாதிக்கப்பட்ட ஏ.ஆர்.ரஹ்மானின் இசைக்கச்சேரி; மாற்று தேதி அறிவிப்பு இசையமைப்பாளர்
    ஏ.ஆர்.ரகுமான் ட்விட்டர் பதிவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் சென்னை

    வைரல் செய்தி

    நீளமான முடியுடன் மீண்டும் வின்டேஜ் லுக்கிற்கு மாறிய எம்எஸ் தோனி; வைரலாகும் காணொளி எம்எஸ் தோனி
    'பாரத' சர்ச்சையில் அடிபடும் தோனியின் பெயர்; என்ன நடந்தது? பாரத்
    நடிகையும் அரசியல்வாதியுமான திவ்யா ஸ்பந்தனா இறந்துவிட்டாரா?  நடிகைகள்
    அசால்ட்டாக சாமர்சால்ட் அடித்த சிறுமி; நெட்டிசன்களை 'வாவ்' சொல்ல வைத்த வீடியோ இன்ஸ்டாகிராம்

    வைரலான ட்வீட்

    புஷ்பா 2: அல்லு அர்ஜுன் வாழ்க்கையில் ஒரு நாள் தேசிய விருது
    ஸ்டீவ் ஜாப்ஸின் கையால் எழுதப்பட்ட அரிய ஆப்பிள்-1 விளம்பரம் ரூ.1.44 கோடிக்கு ஏலத்தில் விற்பனையானது ஆப்பிள்
    'விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி': சந்திரயான் 3 வெற்றிக்கு பிறகு வைரலாகும் மீம்கள்  சந்திரயான் 3
    சமூக வலைத்தளங்களில் வைரலான நடிகர் மாதவனின் சூப்பர்பைக் கலெக்ஷன் ப்ரீமியம் பைக்
    அடுத்த செய்திக் கட்டுரை

    பொழுதுபோக்கு செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    Entertainment Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023