பாலிவுட் நடிகர் சல்மான்கானை இயக்கவுள்ளார் AR முருகதாஸ்
செய்தி முன்னோட்டம்
பிரபல இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், பாலிவுட் நடிகர் சல்மான் கான்-ஐ இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ஏ.ஆர்.முருகதாஸ், கடந்த 2020இல் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் நயன்தாரா ஆகியோரை வைத்து 'தர்பார்' என்ற படத்தை இயக்கினார்.
ஆனால், அத்திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை.
அதன்பின்னர், த்ரிஷா நடிப்பில் வெளியான 'ராங்கி' திரைப்படத்திற்காக கதை எழுதுவது, படங்களை தயாரிப்பது என ஒதுங்கி இருந்த அவர், அடுத்தாக நடிகர் சிவகார்த்திகேயனை இயக்குவதாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் தான் அடுத்த அப்டேட் வெளியாகியுள்ளது.
ஏ.ஆர்.முருகதாஸ் பாலிவுட் நடிகர் சல்மான் கானை வைத்து புதிய திரைப்படத்தை இயக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த படத்தை பிரபல தயாரிப்பாளர் சஜித் நதித்வாலா தயாரிக்கிறார்.
ட்விட்டர் அஞ்சல்
சல்மான்கானை இயக்கவுள்ளார் AR முருகதாஸ்
#ARMurugadoss Comeback 🔥
— Filmy Fanatic (@FanaticFilmy) February 12, 2024
Film with #Sivakarthikeyan & #SalmanKhan 🤩 https://t.co/eNM9HZJ2n3