
செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாகும் ஏ.ஆர்.முருகதாஸ்- சிவகார்த்திகேயனின் மதராஸி
செய்தி முன்னோட்டம்
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமான 'மதராஸி' வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
இறுதிக்கட்ட படப்பிடிப்பில் உள்ள இந்த படத்திற்கு ஆரம்பம் முதலே பரவலான எதிர்பார்ப்பு உள்ளது.
முன்னதாக ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான பாலிவுட் படமான சிக்கந்தர் மிகவும் மோசமான விமர்சனத்தை பெற்றதை அடுத்து, இப்படத்தின் மீது அவர் மிகுந்த கவனம் செலுத்துகிறார் என செய்திகள் கூறுகின்றன.
மதராஸி படத்தில் சிவகார்த்திகேயனுடன் பிஜு மேனன், வித்யுத் ஜம்வால், ருக்மணி வசந்த், ஷபீர், விக்ராந்த் மற்றும் அருண் வெங்கட்ராமதாஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
புகழ்பெற்ற எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் ஆகியோருடன் வலுவான தொழில்நுட்பக் குழுவும் இந்தப்படத்தில் உள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#Madharasi #MadharasiFromSep5 😊👍 pic.twitter.com/qVRIFNHTUc
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) April 14, 2025