'பெண்களை தவறாகச் சித்தரிக்கிறது Toxic': யஷ் படத்தையும் தணிக்கை வாரியத்தையும் விளாசிய அண்ணாமலை
செய்தி முன்னோட்டம்
கன்னட நட்சத்திர நடிகர் யஷ் நடிப்பில் வெளியாகியுள்ள 'டாக்ஸிக்' திரைப்படத்திற்கு தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். படத்தில் பெண்கள் சித்தரிக்கப்பட்டுள்ள விதம் மற்றும் வன்முறை காட்சிகள் இளைஞர்களின் மனநிலையை பாதிக்கும் என கோவை பொதுக்கூட்டத்தில் அவர் பேசியுள்ளார். கோவையில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றிய அண்ணாமலை, மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்தை நேரடியாக விமர்சித்துள்ளார். "நகர்ப்புறங்களில் மேடைகளில் நின்று பெண்களின் பாதுகாப்பு பற்றிப் பேசுகிறோம். ஆனால், தணிக்கை வாரியமோ இதுபோன்ற திரைப்படங்களுக்குச் சான்றிதழ் கொடுத்து திரையரங்குகளுக்கு அனுப்புகிறது. இந்தத் திரைப்படம் பெண்களுக்கு எவ்வித மரியாதையையும் அளிக்கவில்லை; மாணவர்களும் இளைஞர்களும் இதைப் பார்த்தால் நாட்டின் நிலை என்னவாகும்?" என்றார்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
சென்சார் போர்ட் இன்னும் கடுமையாக இருக்க வேண்டும் .
— KanyakumariSubash (@subash_kumari) August 28, 2026
பெண்களை இப்படியா காட்டுவது ?
சமீப காலமாக வெளியாகும் படம் குறித்து நமது @WTLFoundation முதன்மை சேவகர் @annamalai_k அவர்கள்.#Annamalai pic.twitter.com/SB2nY16g5s
வசூல்
வசூலில் சாதனை... ஆனால் 2-வது நாளில் சரிவு
கீது மோகன்தாஸ் இயக்கத்தில், ₹500 கோடிக்கும் அதிகமான மெகா பட்ஜெட்டில் உருவான இத்திரைப்படம் புதன்கிழமை திரையரங்குகளில் வெளியானது.
இந்தியாவில் அனைத்து மொழிகளிலும் சேர்த்து ₹108 கோடி நெட் வசூலித்துள்ளதாக தயாரிப்பு தரப்பு அறிவித்துள்ளது.
ஹிந்தி பதிப்பில் மட்டும் முதல் நாளில் ₹55.4 கோடி வசூலித்து, யஷின் முந்தைய படமான 'KGF Chapter 2' சாதனையை (₹53.95 கோடி) முறியடித்துள்ளது.
முதல் நாளில் மிகப்பெரிய தொடக்கம் கிடைத்த போதிலும், இரண்டாம் நாளில் வசூலில் கணிசமான சரிவைக் கண்டுள்ளது.
இப்படத்தில் யஷ், ராயா மற்றும் டிக்கெட் என்ற இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். நயன்தாரா, கியாரா அத்வானி, தாரா சுதாரியா, ருக்மிணி வசந்த் மற்றும் ஹூமா குரேஷி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.