பாலிவுட்டில் இசையமைத்த முதல் படத்திற்கே அனிருத்திற்கு கிடைத்த உயரிய விருது
இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர், தன்னுடைய முதல் பாலிவுட் திரைப்படமான 'ஜவான்' படத்தில் இசையமைத்ததற்காக, சிறந்த இசையமைப்பாளருக்கான தாதா சாஹிப் பால்கே விருதை பெற்றுள்ளார். 'ஜவான்' திரைப்படம், தமிழ் கலைஞர்கள் பலருக்கும் முதல் படம் என்ற சிறப்பு கொண்டது. இயக்குனர் அட்லீ, தமிழில் பல வெற்றி படங்களை இயக்கிய பின்னர், முதன்முறையாக நேரடி ஹிந்தி படமான ஜவானை இயக்கினார். அந்த படம் சர்வதேச விருதுகளை வென்றது. இந்நிலையில் தாதா சாஹிப் பால்கே திரைப்பட திருவிழா நடைபெற்றது. இந்த விழாவில், சிறந்த நடிகருக்கான விருதை ஷாருக்கானும், சிறந்த நடிகைக்கான விருதை நயன்தாராவும், சிறந்த இயக்குனருக்கான விருதை அட்லீயும் பெற்றனர். இதே விழாவில், சிறந்த இசையமைப்பாளருக்கான விருதை, 'ஜவான்' படத்திற்கு இசையமைத்ததற்காக அனிருத்திற்கு வழங்கப்பட்டது.
அனிருத்திற்கு கிடைத்த விருது
Congratulations Rockstar @anirudhofficial on your win!! Wishing you more success in the feature!! 🤩🤩#DadasahebPhalkeAwards#BestMusicDirector #Anirudh #AnirudhRavichander pic.twitter.com/3kggc6h2De— Rockstar Anirudh Fanpage (@keepcnlvanirudh) February 21, 2024