
ஜவான் படத்திற்காக தாதா சாஹேப் பால்கே விருதுகளை வென்ற ஷாருக்கான், நயன்தாரா
செய்தி முன்னோட்டம்
2024-ஆம் ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விழா விருதுகள் நேற்றிரவு அறிவிக்கப்பட்டன.
இதில், 'ஜவான்' படத்தில் நடித்த நடிகர் ஷாருக்கான் சிறந்த நடிகராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அதேபோல், அப்படத்தில் நடித்திருந்த 'லேடி சூப்பர்ஸ்டார்' நயன்தாரா சிறந்த நடிகையாக தேர்வு செய்யப்பட்டார்.
நயன்தாராவிற்கு, ஷாருக்கான் விருது வழங்கினார்.
அட்லீ, முதல்முறையாக நேரடியாக இயக்கிய பாலிவுட் திரைப்படமான ஜவான், பல சர்வதேச விருதுகளை குவித்து வருகிறது.
இப்படத்தில் ஷாருக்கான், நயன்தாரா, ப்ரியாமணி, தீபிகா படுகோன் மற்றும் பலர் நடித்திருந்தனர்.
விருது பெற்ற பின்னர் ஷாருக்கான் பேசும்போது,"நான் சிறந்த நடிகர் விருதுக்கு தகுதியானவன் என என்னை கருதியதற்காக நடுவருக்கு நன்றி தெரிவிக்கிறேன். விருதுகளை விரும்புபவன் நான். அதன்மேல் எனக்கு சிறிதளவு பேராசையும் உண்டு" என கூறினார்.
ட்விட்டர் அஞ்சல்
தாதா சாஹேப் பால்கே விருது
#CinemaUpdate | தாதா சாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விழாவில் விருதுகளை வென்ற ஷாருக்கான் மற்றும் நயன்தாரா!#SunNews | #DadasahebPhalke | #ShahRukhKhan | #Nayanthara | #Jawan | @iamsrk | @Atlee_dir pic.twitter.com/sGWRVpZjo4
— Sun News (@sunnewstamil) February 21, 2024