LOADING...
ராக்ஸ்டார் அனிருத் - காவ்யா மாறன் திருமணம் உறுதி? ஒய்.ஜி.மகேந்திரன் கொடுத்த Hint
அனிருத் - காவ்யா மாறன் திருமணம் குறித்து ஒய்.ஜி.மகேந்திரன் ஹிண்ட்

ராக்ஸ்டார் அனிருத் - காவ்யா மாறன் திருமணம் உறுதி? ஒய்.ஜி.மகேந்திரன் கொடுத்த Hint

எழுதியவர் Sekar Chinnappan
Jun 28, 2026
06:37 pm

செய்தி முன்னோட்டம்

தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான அனிருத் ரவிச்சந்தர் மற்றும் சன் குழுமத்தின் தலைவரான கலாநிதி மாறனின் மகளும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஐபிஎல் அணியின் சிஇஓவுமான காவ்யா மாறன் ஆகிய இருவரும் கடந்த சில காலமாகக் காதலித்து வருவதாகப் பரவலான வதந்திகள் உலா வந்தன. இந்தச் சூழலில், இவர்கள் இருவரும் விரைவில் தங்களது திருமண வாழ்க்கையில் அதிகாரப்பூர்வமாக இணையவுள்ளனர் என்ற செய்தி தற்பொழுது வெளியாகியுள்ளது. இதனை அனிருத்தின் நெருங்கிய உறவினரும், மூத்த நாடகக் கலைஞருமான நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் ஒரு பிரத்யேக பேட்டியில் கிட்டத்தட்ட உறுதி செய்துள்ளார்.

ஒய்.ஜி.மகேந்திரன்

அனிருத்தின் திருமணத்தை உறுதி செய்த மாமா ஒய்.ஜி.மகேந்திரன்

நடிகை குட்டி பத்மினியின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலான KPTV நேர்காணலில் கலந்துகொண்டு பேசிய அனிருத்தின் மாமாவான ஒய்.ஜி.மகேந்திரன், அனிருத் மிகவும் சாதுவான மற்றும் அடக்கமான ஒரு பையன் என்று குறிப்பிட்டார். மேலும், அந்த நேர்காணலின் வாயிலாக அனிருத்திற்கு தனது அட்வான்ஸ் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாகக் குறிப்பிட்ட அவர், அனிருத் தற்பொழுது ஒரு மிகப்பெரிய குடும்பத்தில், பிரம்மாண்டமான ஒரு திருமணப் பந்தத்திற்குள் நுழையப் போகிறார் என்ற ரகசியத்தையும் வெளிப்படுத்தினார்.

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஒய்.ஜி.மகேந்திரனின் அதிகாரப்பூர்வப் பேட்டி

திருமணக் கதைகள் யாவும் வெறும் வதந்திகளா என்று தொகுப்பாளர் குட்டி பத்மினி தெளிவுபடுத்தக் கேட்டபோது, "எனக்குச் சொல்லப்பட்ட விபரங்களின் அடிப்படையில் இது முற்றிலும் உண்மையான ஒன்று, அவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள்" என்று ஒய்.ஜி.மகேந்திரன் திட்டவட்டமாகக் கூறினார். மேலும் காவ்யா மாறனைப் பற்றிப் பேசிய அவர், காவ்யா ஒரு சாதாரணப் பெண் கிடையாது என்றும், தந்தை கலாநிதி மாறனின் கூர்மையான வணிகத் திறமைகளை அப்படியே பெற்றுப் பெரியதொரு ஐபிஎல் கிரிக்கெட் அணியை மிகத் திறமையாக வழிநடத்தி வருகிறார் என்றும் பாராட்டியுள்ளார்.

Advertisement

ஸ்பெயினில் திருமணம்

ஸ்பெயினில் டெஸ்டினேஷன் வெடிங் மற்றும் சென்னையில் பிரம்மாண்ட வரவேற்பு

இசையமைப்பாளர் அனிருத் மற்றும் காவ்யா மாறன் ஜோடியின் திருமணத் தேதி தற்பொழுது வரை அதிகாரப்பூர்வமாக இறுதி செய்யப்படவில்லை என்றாலும், திரையுலக நம்பத்தகுந்த வட்டாரங்களின்படி இவர்களது திருமணம் நடப்பு 2026 ஆம் ஆண்டின் நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதற்கட்டத் தகவல்களின்படி, ஐரோப்பிய நாடான ஸ்பெயினில் நெருங்கிய சொந்தங்கள் மட்டும் பங்கேற்கும் பிரத்யேக டெஸ்டினேஷன் வெடிங் (Destination wedding) நடைபெறவுள்ளதாகவும், அதன் பின்னர் சென்னையில் ஒட்டுமொத்தப் பிரமுகர்களுக்கான பிரம்மாண்ட வரவேற்பு நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Advertisement

குடும்பப் பின்னணி

அனிருத்தின் சினிமா மற்றும் குடும்பப் பின்னணி

தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித் எனப் பல டாப் ஹீரோக்களின் படங்களுக்கு அசாத்திய இசையமைத்து வரும் அனிருத், 2023இல் வெளியான ஜவான் திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டிலும் தனது கொடியை நாட்டியுள்ளார். அனிருத்தின் குடும்பப் பின்னணியானது கலைத்துறையுடன் மிக ஆழமான பிணைப்பைக் கொண்டது ஆகும். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இவருக்குப் பெரியப்பா முறை என்பதுடன், இவரது எள்ளுத்தாத்தா கே.சுப்ரமணியம் 1930 களின் புகழ்பெற்ற திரைப்பட இயக்குனர் ஆவார். மேலும், இந்தியாவின் புகழ்பெற்ற பரதநாட்டியக் கலைஞர் டாக்டர் பத்மா சுப்ரமணியம் இவருக்குப் பாட்டி முறை என்பது குறிப்பிடத்தக்கது.

காவ்யா மாறன்

சன் குழுமத்தின் வாரிசும் சன்ரைசர்ஸ் அணியின் சிஇஓவுமான காவ்யா மாறன்

மறுபுறம், காவ்யா மாறன், சன் டிவி நெட்வொர்க் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராகப் பணியாற்றி வருவதுடன், ஐபிஎல் கிரிக்கெட்டில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத், தென்னாப்பிரிக்கா டி20 லீகில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் மற்றும் இங்கிலாந்தின் தி ஹண்ட்ரட் தொடரில் சன்ரைசர்ஸ் லீட்ஸ் ஆகிய மூன்று சர்வதேச கிரிக்கெட் அணிகளின் இணை உரிமையாளராகவும், முதன்மை சிஇஓவாகவும் சர்வதேச விளையாட்டுத் துறையில் மிகச் சிறப்பாக முத்திரை பதித்து வருகிறார். திருமணத்திற்குப் பிறகு இந்த ஜோடி இணைந்து ஒரு புதிய இசை சார்ந்த தொழிலைத் தொடங்கலாம் என்றும் ஒய்.ஜி.மகேந்திரன் ஆலோசனை கூறியுள்ளார்.

Advertisement