Loading...
ஷாருக் கானின் 'கிங்' படத்தில் இருந்து இசையமைப்பாளர் அனிருத் விலகல்: பின்னணி என்ன?
ஷாருக் கானின் 'கிங்' படத்தில் இருந்து இசையமைப்பாளர் அனிருத் விலகல்

ஷாருக் கானின் 'கிங்' படத்தில் இருந்து இசையமைப்பாளர் அனிருத் விலகல்: பின்னணி என்ன?

எழுதியவர் Venkatalakshmi V
Oct 30, 2026
05:11 pm

செய்தி முன்னோட்டம்

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாரூக்கான் நடிப்பில், சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் 'கிங்' திரைப்படத்தில் இருந்து இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் விலகியுள்ளதாக பாலிவுட் ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. தொடர் திரைப்பட வேலைகள் மற்றும் டைட்டான வேலை ஷெட்யூல் காரணமாகவும், திருமணக் கொண்டாட்டங்களுக்காக ஒரு பிரேக் எடுப்பதாலும் 'கிங்' படத்தில் இருந்து விலக அனிருத் முடிவெடுத்துள்ளார் என அந்த செய்திகள் கூறுகின்றன. எனினும் ஷாருக்கான் மீதான மரியாதையின் நிமித்தமாக 'கிங்' திரைப்படத்திற்கான முக்கிய தீம் டிராக்கை அனிருத் இசையமைத்து தயாரிப்பாளர்களுக்கு பரிசாக வழங்கியுள்ளார். நடிகர் ஷாருக்கான் மற்றும் இயக்குநர் சித்தார்த் ஆனந்த் ஆகியோருடன் பலகட்ட பேச்சுவார்த்தை நடத்திய பிறகே, சுமுகமான முறையில் இத்திட்டத்தில் இருந்து அனிருத் விலகியுள்ளார்.

புதிய இசையமைப்பாளர்

களம் இறங்கிய சச்சின் - ஜிகார் இணை

அனிருத் விலகியதைத் தொடர்ந்து, 'கிங்' திரைப்படத்திற்கு இசையமைக்கும் மற்றும் பின்னணி இசை கோர்க்கும் பொறுப்பு பிரபல பாலிவுட் இரட்டை இசையமைப்பாளர்களான சச்சின் - ஜிகார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அனிருத் உருவாக்கிய தீம் டிராக்கை பயன்படுத்தி, பின்னணி இசையை மேலும் மேம்படுத்தும் பணிகளைச் சச்சின் - ஜிகார் இணை ஏற்கனவே தொடங்கிவிட்டது.

ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகும் இத்திரைப்படத்தின் போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

இத்திரைப்படத்தில் ஷாருக்கானுடன் இணைந்து சுஹானா கான், தீபிகா படுகோன் மற்றும் அபிஷேக் பச்சன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

'கிங்' திரைப்படம் திட்டமிட்டபடி கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வரும் டிசம்பர் 24 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

ADVERTISEMENT