LOADING...
ஓடிடி வெளியீட்டிற்கு தயாராகும் அனிமல்; எப்போது?
ஓடிடி வெளியீட்டிற்கு தயாராகும் அனிமல்

ஓடிடி வெளியீட்டிற்கு தயாராகும் அனிமல்; எப்போது?

எழுதியவர் Venkatalakshmi V
Jan 23, 2024
01:20 pm

செய்தி முன்னோட்டம்

சமீபத்தில், 'அர்ஜுன் ரெட்டி' திரைப்பட இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கி பிரமாண்ட வெற்றி பெற்ற திரைப்படம் 'அனிமல்'. வசூல்ரீதியாக இந்த படம் பல கோடிகளை வசூலித்தது என்றாலும், விமர்சனரீதியாக கலவையான விமர்சனங்களை பெற்றது. அதீத வன்முறை காட்சிகள், சர்ச்சையான காட்சியமைப்புகள் என பலரும் பலவித கருத்துகளை தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் அனிமல் திரைப்படம் தியேட்டரில் ரிலீஸ் ஆகி கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் ஆன நிலையில், இப்படத்தை ஓடிடி ரிலீஸ் செய்யாமல் வைத்திருந்தனர். பைனான்ஸ் பிரச்சனை காரணமாக, அனிமல் திரைப்படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்ய தடை விதிக்கப்பட்டு இருந்தது. தற்போது சுமூக தீர்வு எட்டப்பட்டதால், வரும் ஜனவரி 26 ஆம் தேதி அனிமல் திரைப்படம் நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

ட்விட்டர் அஞ்சல்

ஓடிடி வெளியீட்டிற்கு தயாராகும் 'அனிமல்'