ஏஞ்சலினா ஜோலி-பிராட் பிட்: 8 ஆண்டுகளுக்குப் பிறகு விவாகரத்து பெற்றது ஹாலிவுட்டின் பிரபல ஜோடி
செய்தி முன்னோட்டம்
பிரபல ஹாலிவுட் நட்சத்திர ஜோடியான ஏஞ்சலினா ஜோலி மற்றும் பிராட் பிட் விவாகரத்திற்கான தீர்வை எட்டியுள்ளனர்.
ஹாலிவுட் வரலாற்றில் மிக நீண்ட மற்றும் மிகவும் சர்ச்சைக்குரிய விவாகரத்துகளில் ஒன்றிற்கு இறுதி முடிவு எட்டப்பட்டதாக திங்களன்று அவரது வழக்கறிஞர் கூறினார்.
ஜோலியின் வழக்கறிஞர், ஜேம்ஸ் சைமன், தி அசோசியேட்டட் பிரஸ்ஸிடம் தம்பதியினர் ஒரு ஒப்பந்தத்திற்கு வந்ததை உறுதிப்படுத்தினார்.
விவாகரத்து பற்றிய செய்தி முதலில் பீப்பிள் பத்திரிகை மூலம் தெரிவிக்கப்பட்டது.
விவரங்கள்
விவாகரத்து குறித்த விவரங்களை வழக்கறிஞர் வெளியிட்டார்
"எட்டு ஆண்டுகளுக்கு முன்பு, ஏஞ்சலினா, பிராட் பிட்டிடம் இருந்து விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்தார்," சைமன் ஒரு அறிக்கையில் கூறினார்.
"அவரும், குழந்தைகளும் அவர்கள் பிராட் பிட்டுடன் பகிர்ந்து கொண்ட அனைத்து சொத்துக்களையும் விட்டுவிட்டார்கள், அன்றிலிருந்து அவர் தங்கள் குடும்பத்திற்கு அமைதி மற்றும் குணப்படுத்துவதில் கவனம் செலுத்தினார் ஏஞ்சலினா. இது எட்டு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய ஒரு நீண்ட செயல்முறையின் ஒரு பகுதி மட்டுமே. வெளிப்படையாகச் சொன்னால், ஏஞ்சலினா களைத்துப் போய்விட்டார், ஆனால் இந்த ஒரு பகுதி முடிந்துவிட்டதால் அவர் நிம்மதியடைந்தார்" எனத்தெரிவித்தார்.
வாழ்க்கை
ஹாலிவுட்டின் மிகவும் விரும்பப்பட்ட நட்சத்திர ஜோடியின் திருமண வாழ்க்கை
49 வயதான ஏஞ்சலினா ஜோலி மற்றும் 61 வயதான பிராட் பிட், ஹாலிவுட்டின் மிக முக்கியமான ஜோடிகளாக 12 ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்தனர்.
ஆஸ்கார் விருது பெற்ற இருவருக்கும் ஒன்றாக ஆறு குழந்தைகள் உள்ளனர்.
எனினும், ஏஞ்சலினா ஜோலி 2016 இல் விவாகரத்து கோரி விண்ணப்பித்தார்.
ஐரோப்பாவில் இருந்து ஒரு தனியார் ஜெட் விமானத்தின் போது பிராட் பிட் தன்னையும் அவர்களது குழந்தைகளையும் தவறாகப் பேசியதாக அந்த விண்ணப்பத்தில் கூறினார்.
2019 இல் அவர்கள் தனித்து வசிப்பதாக அறிவித்தார்.
வழக்கைக் கையாள இருவரும் நியமித்த ஒரு தனியார் நீதிபதி, விவாகரத்து முடிவை அறிவித்தார். அதன்பிறகு அவர்களது குழந்தைகளின் பாதுகாவல் சமமாக பிரிக்கப்பட்டது.
சொத்துகள் பிரிப்பது குறித்து தற்போது இருவருக்கும் ஒப்பந்தம் எட்டப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.