கேப்டன் மில்லர் விழாவில் தன்னிடம் அத்து மீறிய நபருக்கு பாடம் புகட்டிய பெண் தொகுப்பாளர்
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ், பிரியங்கா மோகன் உள்ளிட்ட பலர் நடிக்கும் கேப்டன் மில்லர் திரைப்படம், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து உள்ள நிலையில், ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இந்நிலையில் படத்தின் முன் வெளியீட்டு விழா(Pre- Release Event) நேற்று சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடந்தது. நிகழ்ச்சியில் நடிகர் தனுஷ் உட்பட பல நடிகர், நடிகைகள் பங்கேற்றனர். இதில், பெண் தொகுப்பாளர் ஒருவர் தன்னிடம் அத்துமீறிய ரசிகருக்கு பாடம் புகட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தன்னை சீண்டிய வரை காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வைத்த தொகுப்பாளர்
அந்த வைரல் வீடியோ காட்சியில், தொகுப்பாளர் ஐஸ்வர்யா ரகுபதி ரசிகர் ஒருவரை சரமாரியாக தாக்குகிறார். மேலும், அவரை பலமுறை காலில் விழுந்து மன்னிப்பு கேட்கும் படியும் வலியுறுத்துகிறார். இந்த வீடியோ வேகமாக பரவி வரும் நிலையில், அந்த ரசிகர் தொகுப்பாளர் ஐஸ்வர்யாவிடம் தவறாக நடந்து கொண்டதாகவும், அதனாலையே அவரை தாக்கியதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து ஐஸ்வர்யா ரகுபதி இன்ஸ்டாகிராம் ஸ்டோரிஸில் பேசியுள்ளார்.
வைரலாகும் ஐஸ்வர்யா ரகுபதியின் வீடியோ
தொகுப்பாளர் ஐஸ்வர்யா இன்ஸ்டாகிராமில் விளக்கம்
அதில் அவர், "அந்த கூட்டத்தில், ஒருவன் என்னை தொந்தரவு செய்தான். நான் உடனடியாக அவரை எதிர்கொண்டேன், நான் அவரை அடிக்கத் தொடங்கும் வரை விடவில்லை. அவன் ஓடினார், ஆனால் நான் என் பிடியை விடுவிக்க மறுத்து அவனை துரத்தினேன். ஒரு பெண்ணின் உடல் உறுப்பை தொடும் அளவிற்கு அவனுக்கு தைரியம் இருந்ததை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. நான் கத்தி அவனை தாக்கினேன்" எனக் கூறியுள்ளார். மேலும், "என்னை சுற்றி நல்ல மனிதர்கள் இருப்பதை நான் அறிவேன். உலகில் அன்பான மற்றும் மரியாதைக்குரிய மனிதர்கள் நிறைய இருப்பதை நான் அறிவேன். ஆனால் சில சதவீத பேய்கள் மத்தியில் இருக்கும் போது, எனக்கு பயமாக இருக்கிறது" எனக் பதிவிட்டுள்ளார்.