30 ஆண்டுகளுக்கு பிறகு அமீர்கான், ரஜினிகாந்த் இணைந்து 'கூலி' படத்தில் நடிக்கவுள்ளனர்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது தனது அடுத்த படமான கூலி ( தலைவர் 171 ) படப்பிடிப்பில் பிஸியாக நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு வைசாக்கில் நடைபெற்று வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கும் இப்படத்தில் ஸ்ருதிஹாசன், சத்யராஜ், கன்னட நடிகர் உபேந்திரா உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இருப்பினும், பாலிவுட் ஸ்டார் நடிகர் அமீர்கான் இந்த படத்தில் சிறப்பு கேமியோவில் நடிக்கக்கூடும் என்று சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. அது உண்மையாக இருப்பின் 1995 ஆம் ஆண்டு வெளியான ஆடங்க் ஹி ஆடங்க் திரைப்படத்திற்குப் பிறகு, கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் கழித்து ரஜினிகாந்த் மற்றும் அமீர்கான் இருவரும் திரையில் மீண்டும் இணைவது இப்படமாகும்.