புஷ்பா 2 ஓடிடி தேதி வெளியானது; விவரங்கள் இதோ
அல்லு அர்ஜுன் நடிப்பில் சமீபத்தில் வெளியான புஷ்பா 2 திரைப்படம், பாக்ஸ் ஆபீஸில் 1000 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை புரிந்துள்ளது. இந்தியா தாண்டி வெளிநாடுகளிலும் இப்படம் வசூலை குவித்து வரும் நிலையில் இப்படத்தின் OTT வெளியீட்டு தேதி தற்போது வெளியாகியுள்ளது. அதிகாரபூர்வமாக இது குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை என்றாலும், இப்படம் அடுத்த மாதம் ஓடிடியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இணையத்தகவலின் படி, வருகிற ஜனவரி மாதம் 9ஆம் தேதி புஷ்பா 2 நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. புஷ்பா 2 படத்தின் ஓடிடி உரிமையை நெட்ஃபிலிக்ஸ் நிறுவனம் ரூ.275 கோடிக்கு வாங்கி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
Twitter Post
திரையரங்குகளில் வசூல் சாதனை புரியும் புஷ்பா 2
செம்மர கடத்தல்காரனாக அல்லு அர்ஜுன் புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரை எதிர்க்கும் ஒரு மூர்க்கமான காவல்துறை அதிகாரி பன்வர் சிங் கதாபாத்திரத்தில் ஃபஹத் ஃபாசில் நடித்துள்ளார். இவர்களோடு ரஷ்மிக்கா மந்தனா, ஜெகபதி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பில் படத்தின் பாடல்கள் ஹிட் ஆகிவிட்டது. திரையரங்குகளில் தொடர் வசூல் வேட்டையில் ஈடுபட்டுள்ளது புஷ்பா 2 திரைப்படம். படம் வெளியாகி 14 நாட்களில், ரூ.1450.13 கோடி வசூல் செய்துள்ளது. இப்படத்தின் தெலுங்கு பதிப்பு மட்டுமின்றி, ஹிந்தி பதிப்பும் வசூல் சாதனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.