Page Loader
சென்னை வந்திறங்கிய அல்லு அர்ஜுன்: அட்லீ பட அறிவிப்பு வெளியாகிறதா?
விரைவில் அல்லு அர்ஜுன்- அட்லீ படத்தின் அறிவிப்பு வெளியாகும்

சென்னை வந்திறங்கிய அல்லு அர்ஜுன்: அட்லீ பட அறிவிப்பு வெளியாகிறதா?

எழுதியவர் Venkatalakshmi V
Apr 04, 2025
05:40 pm

செய்தி முன்னோட்டம்

'புஷ்பா 2: தி ரூல்' படத்தின் மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு அல்லு அர்ஜுன் அடுத்ததாக எந்த படத்தில் இணைவார் என பலரும் எதிர்பார்த்திருக்கும் நேரத்தில், அவர் சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில், அட்லீ இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார் என செய்திகள் வெளியாகின. அட்லீயும் ஷாருக்கானின் 'ஜவான்' படத்திற்குப் பிறகு அவருடைய அடுத்த படத்தின் அறிவிப்பை இன்னும் ரகசியமாக வைத்துள்ளார். இந்த நிலையில் இன்று ஏப்ரல் 4 ஆம் தேதி, அல்லு அர்ஜுன் சென்னை வந்தடைந்தார். இது சன் பிக்சர்ஸ் மற்றும் இயக்குனர் அட்லீ ஆகியோருடன் அவர் இணையவிருக்கும் பெரிய பட்ஜெட் பொழுதுபோக்குப் படத்திற்கான சந்திப்பு என கூறப்படுகிறது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

விவரங்கள்

புதிய படத்தின் அறிவிப்பு ஏப்ரல் 8 அன்று வெளியாகக்கூடும்

அட்லீ மற்றும் அல்லு அர்ஜுன் கூட்டணியில் உருவாகும் படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஏப்ரல் 8, அல்லு அர்ஜுனனின் பிறந்தநாளை ஒட்டி அறிவிக்கப்படலாம் என கூறப்படுகிறது. இதற்காக படக்குழுவினர் ஒரு ப்ரோமோ ஷூட் செய்யப்படலாம் என்று குழுவினருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன. விரைவில், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும். முன்னதாக, அட்லீ சல்மான் கானை வைத்து ஒரு படத்தை இயக்குவதாக இருந்தது. ஆனால், பட்ஜெட் கட்டுப்பாடுகள் காரணமாக அது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.