மும்பையில், 37.80 கோடிக்கு வீடு வாங்கிய RRR பட நடிகை
செய்தி முன்னோட்டம்
பிரபல பாலிவுட் நடிகையான ஆலியா பட் சமீபத்தில் தனது தயாரிப்பு நிறுவனமான Eternal sunshine pvt ltd மூலம், மும்பையின் பாந்த்ரா பகுதியில், ஒரு அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றை வாங்கியுள்ளார்.
பாந்த்ரா வெஸ்டில் அமைந்துள்ள அந்த வீடு, 2,497 சதுர அடி அளவில் இருப்பதாகவும், அதன் விலை ரூ.37.80 கோடி என்றும் கூறப்படுகிறது.
இதற்கான ரெஜிஸ்ட்ரேஷனின் போது, ரூ.2.26 கோடி ஸ்டாம்ப் டூட்டி கட்டியதாகவும், ஏப்ரல் 10ஆம் தேதி வீடு ரெஜிஸ்டர் செய்யப்பட்டதாகவும் செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.
இது மட்டுமின்றி, அதேநாளில், தனது சகோதரி ஷாஹீனுக்கு, 7.68 கோடி மதிப்புள்ள இரண்டு அடுக்குமாடி குடியிருப்புகளை பரிசாக அளித்துள்ளார் ஆலியா.
இந்த பரிவர்த்தனைக்காக 30.75 லட்ச ரூபாய் முத்திரைக் கட்டணத்தையும் அலியா செலுத்தியுள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
அடுக்குமாடி வீடு வாங்கிய ஆலியா பட்
Bollywood actress Alia Bhatt has recently purchased a premium residential apartment in the plush locality of Pali Hill in Mumbai's Bandra , the actress paid a whooping Rs 37.80 crore for a 2,497 square feet apartment in Bandra West.#AliaBhatt #RanbirKapoor pic.twitter.com/ogJSC7cbVB
— All that trending (@allthatrending) April 25, 2023