
#AK63 திரைப்படத்தை இயக்கும் ஆதிக் ரவிச்சந்திரன்- உறுதிப்படுத்திய அஜித்தின் மேலாளர்
செய்தி முன்னோட்டம்
நடிகர் அஜித்தின் #AK63 திரைப்படத்திலிருந்து இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் நீக்கப்பட்டதாக தகவல் வெளியான நிலையில், அவரே இப்படத்தை இயக்குவதாக அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா உறுதி செய்திருப்பதாக கூறப்படுகிறது.
#AK63 திரைப்படத்தை மார்க் ஆண்டனி திரைப்படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குவதாகவும், மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிப்பதாகவும் அண்மையில் தகவல் வெளியானது.
இந்நிலையில், தயாரிப்பு நிறுவனம் படத்தை 'பேன் இந்தியா' திரைப்படமாக உருவாக்க விரும்புவதால், ஆதிக் ரவிச்சந்திரனுக்கு பதில் தெலுங்கு இயக்குனர் கோபிசந்த் மலினேனி இப்படத்தை இயக்குவதாக தகவல்கள் பரவியது.
கோபிசந்த் மலினேனி, அண்மையில் பாலகிருஷ்ணாவை வைத்து வீர சிம்ம ரெட்டி திரைப்படத்தை இயக்கியது குறிப்பிடத்தக்கது.
தற்போது, ஆதிக் ரவிச்சந்திரனே இப்படத்தை இயக்குவதாக, அஜித்தின் மேலாளர் உறுதிப்படுத்திருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ட்விட்டர் அஞ்சல்
ஆதிக் ரவிசந்திரன் இயக்கும் #AK63
Checked with Actor #AjithKumar 's Manager @SureshChandraa Sir..
— Ramesh Bala (@rameshlaus) November 29, 2023
The news circulating that Director @Adhikravi is replaced as Director from #AK 's next project is incorrect..