Page Loader
இணையத்தில் ட்ரெண்டாகும் துணிவு படத்தின் மேக்கிங் வீடியோ!
துணிவு படத்தின் மேக்கிங் வீடியோ

இணையத்தில் ட்ரெண்டாகும் துணிவு படத்தின் மேக்கிங் வீடியோ!

எழுதியவர் Siranjeevi
Jan 25, 2023
06:40 pm

செய்தி முன்னோட்டம்

நடிகர் அஜித் குமார் நடிப்பில், இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில்கடந்த 11 ஆம் தேதி வெளியாகி மிகப்பெரும் வரவேற்பை பெற்ற படம் தான் துணிவு. இந்நிலையில் துணிவு படத்தின் மேக்கிங் வீடியோ சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. இப்படம் வெளியான நாளில் இருந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது., இப்படத்தின் ஆக்சன் காட்சிகள் உருவாக்கம் கவனம் ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது. இந்த படத்தில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தமிழ்நாட்டிலும் லைகா நிறுவனம் வெளிநாட்டிலும் வெளியிட்டது.

ட்விட்டர் அஞ்சல்

துணிவு படத்தின் மேக்கிங் வீடியோ