
ஒரு படத்தின் வசூல் பற்றி வெளியாகும் பாக்ஸ் ஆபீஸ் ரிப்போர்ட் பொய்: 'துணிவு' பட இயக்குனர் H.வினோத்
செய்தி முன்னோட்டம்
பொங்கலை ஒட்டி வெளியாகி, தற்போது வரை வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கும் இரு படங்கள்- விஜய் நடித்த 'வாரிசு' மற்றும் அஜித்தின் 'துணிவு' ஆகும்
இவ்விரு படங்களின் ரசிகர்கள், சமூக வலைத்தளங்களில் மாறி மாறி சண்டை போடுவது பத்தாது என்பதுபோல, தற்போது தயாரிப்பாளர்கள் பக்கமிருந்து, அப்படங்களின் வசூல் பற்றி போட்டி நிலவி வருகிறது.
இரு தினங்களுக்கு முன்னர், 'துணிவு' படமும், 'வாரிசு' படமும் 200 கோடி வசூலை பெற்றுள்ளது எனக்கூறப்பட்டது.
இந்நிலையில், 'பாக்ஸ் ஆபீஸ் ரிப்போர்ட்' பற்றி வெளி வரும் செய்திகள் அனைத்தும் பொய் எனவும், படத்தின் தயாரிப்பாளர்கள், தொழில் போட்டி காரணமாக அவ்வாறு கூற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறார்கள் என்றும் டைரக்டர் வினோத் கூறியுள்ள வீடியோ ஒன்று தற்போது வைரல் ஆகி வருகிறது.
ட்விட்டர் அஞ்சல்
டைரக்டர் வினோத் பேட்டி
H Vinoth in a recent interview :
— TRENDS AJITH (@TrendsAjith) January 19, 2023
Because of this box office game few producers are forced to make a fake box office collection figures to promote their movies 😉👏👌
Direct kottu on bald head🤭 #Thunivu #Ajithkumar #BlockbusterTHUNIVU pic.twitter.com/y3JLbno653