உண்மை தகவல் சரிபார்ப்பு: 'வாரிசு', 'துணிவு' படங்களின் வசூல் செய்தி உண்மையா?
பொங்கல் திருநாளை ஒட்டி வெளியான இரு திரைப்படங்கள் அஜித் நடித்த 'துணிவு' மற்றும் விஜயின் 'வாரிசு' ஆகியவை ஆகும். இவ்விரண்டு திரைப்படங்களும் 200 கோடியை தாண்டி வசூலித்துள்ளது என செய்திகள் வெளிவந்தன. இந்நிலையில், உண்மையிலேயே இந்த வசூல் நிலவரங்களை எவ்வாறு கணக்கிடுகிறார்கள், அதன் உண்மை நிலவரம் என்ன என்பதை பற்றி ஒரு சிறு முன்னோட்டம் இதோ: ஹிந்து தமிழ் இசையில் வெளியான செய்தி அடிப்படையில், இந்த வசூல் நிலவரங்கள் உண்மைத்தன்மை சற்றே கேள்விக்குரியதாகிறது. கூடுதல் வசூல் செய்திகள், நடிகர்கள் தங்கள் சம்பளத்தை உயர்த்தவும், ரசிகர்களின் திருப்திகாகவும் மட்டுமே கூறப்படுகிறது. விநியோகஸ்தர்களுக்கு, அந்தந்த மாநிலங்களின் நிலவரம் மட்டுமே தெரிய வரும் என்றும், மற்ற மாநிலங்களின் விற்பனை நிலவரம் தெரிய வராது என்றும் கூறப்பட்டுள்ளது.
படங்களின் வசூலுக்கு வரி கட்ட வேண்டும்
மினிமம் கேரண்டி முறையில் வாங்கி இருந்தால் மட்டுமே, விற்பனை ரிப்போர்ட் விநியோகஸ்தர்களுக்கு அனுப்பப்படும். மேலும், இது போல பாக்ஸ் ஆபீஸ் ரிப்போர்ட் வழக்கம், வெளிநாடுகளில் கிடையாதென்றும், ஆகையால் ஓவர்சீஸ் விற்பனை நிலவரம் பற்றிய செய்திகள் நம்பத்தகுந்தவை அல்ல என்றும் தியேட்டர் உரிமையாளர்கள் சங்க உறுப்பினர் கூறியுள்ளார். இதோடு, தமிழ்நாட்டில், வசூல் செய்யப்படும் தொகையில், 26 % வரி கட்டவேண்டும். அதனால், தற்போது கூறப்படும் வசூல் நிலவரங்கள், இந்த வரியுடன் கூடியதா, வரி கட்டும் முன் வசூலானதா என்பதும் தெளிவாக கூறப்படவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளது. மேலும், இரு படங்களுக்குமே 5 % வித்தியாசம் மட்டுமே உள்ளதெனவும், இரு படங்களும் ஒரு சேர வெளியிடப்பட்டதால், இரு படங்களுக்கும் 25% பாதிப்பு உள்ளதெனவும், அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.