விடாமுயற்சி படத்திற்கு பிரேக்; குழுவாக மீண்டும் பைக் ரைட் செல்கிறார் அஜித்
நடிகர் அஜித், தனது காதுப்பகுதியில் நடைபெற்ற சிறிய அறுவை சிகிச்சையிலிருந்து மீண்டு, தற்போது பைக் ரைட் செல்ல தயாராகிவிட்டார். இது சம்மந்தமான புகைப்படங்களை, அஜித்தின் PRO சுரேஷ் சந்திரா இணையத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்களிலிருந்து, 'விடாமுயற்சி' திரைப்படத்தில் தனக்கு வில்லனாக நடிக்கும் நடிகர் ஆரவ்-வும் அஜித்துடன் பைக் ரைட் செல்கிறார் என்பது தெரியவருகிறது. முன்னதாக அஜித், 'துணிவு' படத்தில் நடித்துக்கொண்டிருந்த போதுதான், பைக்கில் இந்தியா டூர் சென்றார். அதன் பின்னரே, பைக்கில் வேர்ல்ட் டூர் செல்வது என திட்டமிடப்பட்டு, அதற்கான அறிவிப்பும் வெளியானது. நடிகை மஞ்சு வாரியரும் அவருடன் செல்ல தயாராகி வருவதாக குறிப்பிட்டது நினைவிருக்கலாம். தற்போது அஜித், மத்தியபிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களில் சுற்று பயணம் மேற்கொள்ளவிருக்கிறார் என செய்திகள் தெரிவிக்கின்றன.