ஐஸ்வர்யா அர்ஜுன் உமாபதி விவாகரத்து வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார் நடிகர் தம்பி ராமையா
செய்தி முன்னோட்டம்
தமிழ் திரையுலகின் பிரபல ஆக்ஷன் கிங் அர்ஜுனின் மூத்த மகளும் நடிகையுமான ஐஸ்வர்யா அர்ஜுன் மற்றும் தேசிய விருது பெற்ற நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையா தம்பதியினர் விவாகரத்து செய்ய உள்ளதாக சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல்களுக்கு தம்பி ராமையா முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இருவரும் மகிழ்ச்சியாக தங்களது குடும்ப வாழ்க்கையைத் தொடர்ந்து வருவதாகவும், ஆதாரமற்ற தகவல்களைப் பரப்ப வேண்டாம் என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
இத்தாலி பயணம்
சந்தேகத்தை கிளப்பிய சமூக வலைதளப் பதிவு
அர்ஜுன் தொகுத்து வழங்கிய 'சர்வைவர் தமிழ்' நிகழ்ச்சியின் மூலம் பழகி, காதலித்து கடந்த 2024 ஜூன் மாதம் திருமணம் செய்துகொண்ட இந்த ஜோடி குறித்து திடீரென இணையத்தில் சலசலப்பு ஏற்பட்டது.
கடந்த ஆண்டு உமாபதியின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்திருந்த ஐஸ்வர்யா, இந்த ஆண்டு வாழ்த்துப் பதிவு எதையும் வெளியிடாதது, தீபாவளிப் படங்களில் உமாபதி இடம்பெறாதது மற்றும் சில புகைப்படங்களில் திருமண மோதிரம் அணியாமல் இருந்தது போன்ற காரணங்களைச் சுட்டிக்காட்டி விவாகரத்து வதந்திகள் பரப்பப்பட்டன.
மேலும், ஐஸ்வர்யாவின் தங்கை அஞ்சனாவின் திருமணம் அண்மையில் இத்தாலியில் நடைபெற்றபோது, அதில் உமாபதி மற்றும் அவரது குடும்பத்தினர் கலந்துகொள்ளாததும் இந்த சந்தேகத்தை மேலும் பெரிதாக்கியது.
தம்பி ராமையா விளக்கம்
வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி
இந்த விவகாரம் குறித்துப் பேசிய நடிகர் தம்பி ராமையா, "ஐஸ்வர்யாவும் உமாபதியும் சென்னையில் தங்களது இல்லத்தில் மிகவும் மகிழ்ச்சியாக தான் வாழ்ந்து வருகிறார்கள்".
"இத்தாலியில் நடைபெற்ற அஞ்சனாவின் திருமணத்திற்கு 12 நாட்கள் வரை பயணம் செய்து அதிக செலவு செய்ய விருப்பம் இல்லாததால் மட்டுமே நாங்கள் அதில் கலந்துகொள்ளவில்லை. இதில் வேறு எந்தக் காரணமும் இல்லை".
"விரைவில் சென்னையில் தம்பதியருக்கு பிரம்மாண்ட வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. அதில் எங்கள் குடும்பத்தினர் அனைவரும் தவறாமல் கலந்துகொள்வோம்" என்று கூறி வதந்திகளுக்கு விளக்கமளித்துள்ளார்.