NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / 'சுட்டி குழந்தை' நடிகர் அகில் அக்கினேனிக்கு டும் டும் டும்; நடிகை அமலா பகிர்ந்த மகிழ்ச்சியான செய்தி
    அடுத்த செய்திக் கட்டுரை
    'சுட்டி குழந்தை' நடிகர் அகில் அக்கினேனிக்கு டும் டும் டும்; நடிகை அமலா பகிர்ந்த மகிழ்ச்சியான செய்தி
    நடிகர் அகில், 'சுட்டி குழந்தை' என்ற படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயம் ஆனவர்

    'சுட்டி குழந்தை' நடிகர் அகில் அக்கினேனிக்கு டும் டும் டும்; நடிகை அமலா பகிர்ந்த மகிழ்ச்சியான செய்தி

    எழுதியவர் Venkatalakshmi V
    Nov 27, 2024
    10:51 am

    செய்தி முன்னோட்டம்

    நடிகர் நாகர்ஜூனாவின் வீட்டில் மற்றுமொரு மகிழ்ச்சியான நிகழ்வு நடந்துள்ளது. நாகார்ஜூனா- அமலா தம்பதியினரின் மகனான நடிகர் அகிலுக்கு திருமண நிச்சயதார்த்தம் நேற்று நடைபெற்றது.

    நடிகர் அகில், 'சுட்டி குழந்தை' என்ற படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயம் ஆனவர். அவர் தற்போது தெலுங்கு படவுலகில் வளர்ந்து வரும் நடிகராவார்.

    அவருக்கும், அவருடைய நீண்ட நாள் காதலியான ஜைனப் என்பவருக்கும் நேற்று இருவீட்டார் முன்னிலையில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

    இந்த ஜோடி கடந்த இரு ஆண்டுகளாக காதலித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

    இந்த மகிழ்ச்சியான செய்தியை நடிகை அமலாவும், நாகர்ஜூனாவும் தங்கள் சமூக வலைத்தளத்தில் அறிக்கை மூலம் ரசிகர்களுக்கு பகிர்ந்துகொண்டனர்.

    விவரங்கள்

    யார் அந்த ஜைனப்?

    ஜைனப் ராவ்ட்ஜி, தெலங்கானாவின் தொழில் அதிபர் சுல்பி ராவ்ஜியின் மகள் ஆவார். அவர் கட்டுமானத் துறையில் முன்னோடியாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

    ஜைனப் ராவ்ட்ஜி, சிறு வயது முதல் இந்தியா, துபாய் மற்றும் லண்டன் ஆகிய நாடுகளுக்கு இடையே தனது வாழ்க்கையைக் கழித்ததாகவும், அவர் ஒரு திறமையான ஓவியர் எனவும் கூறப்படுகிறது.

    மேலும் அவரது படைப்புகள் ஹைதராபாத் உட்பட பல கண்காட்சிகளில் இடம்பெற்றுள்ளன.

    இவரும், நடிகர் அகிலும் சிறு வயது முதல் நண்பர்கள் எனவும் கூறப்படுகிறது.

    இதற்கிடையில் நடிகர் நாக சைதன்யா- ஷோபிதா திருமண நிகழ்வுகளை ஒட்டியே இவர்களின் திருமண நிகழ்வும் நடைபெற வேண்டும் என அவர்கள் விரும்பியதால் இந்த திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றதாகவும் செய்திகள் கூறுகின்றன.

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    We are thrilled to announce the engagement of our son, @AkhilAkkineni8, to our daughter in law to be Zainab Ravdjee!

    We couldn't be happier to welcome Zainab into our family. Please join us to congratulate the young couple and wish them a lifetime filled with love, joy, and… pic.twitter.com/5KM7BU00bz

    — Nagarjuna Akkineni (@iamnagarjuna) November 26, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    திருமணம்
    திருமணங்கள்
    தெலுங்கு திரையுலகம்
    தெலுங்கு படங்கள்

    சமீபத்திய

    தடாலடியாக உயர்ந்த தங்கம் விலை; இன்றைய நிலவரம் என்ன? தங்கம் வெள்ளி விலை
    பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்; கோடை விடுமுறைக்குப் பின் பள்ளிகள் திறப்பு தாமதமாக வாய்ப்புள்ளதாக தகவல் பள்ளிகள்
    ரூ.1,000 கோடி டாஸ்மாக் பணமோசடி வழக்கில் தமிழகத்தில் 10 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை டாஸ்மாக்
    உங்கள் ஏரியாவில் நாளை (மே 17) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை

    திருமணம்

    இன்று வரலக்ஷ்மி சரத்குமார்- நிக்கோலாய் திருமணம் நடைபெறவுள்ளது சரத்குமார்
    சமஸ்கிருத ஸ்லோகம், காளியின் ஒன்பது அவதாரங்கள்: மாமேரு நிகழ்ச்சியில் ராதிகா மெர்ச்சண்ட் அணிந்திருந்த ஆடை பற்றி சில தகவல்கள் முகேஷ் அம்பானி
    வீடியோ: அனந்த் அம்பானியின் திருமண விழாவில் ஜஸ்டின் பீபரின் இசை நிகழ்ச்சி  ஆனந்த் அம்பானி
    'பாலக் சாட்' முதல் 'குல்பி' வரை: அம்பானி வீட்டு திருமண விருந்தின் மெனு தெரியுமா? ஆனந்த் அம்பானி

    திருமணங்கள்

    விக்னேஷ் சிவன்- நயன்தாராவின் திருமண வீடியோ குறித்து வெளியான புதிய தகவல் ஓடிடி
    பாலிவுட் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ராவை திருமணம் செய்ய போகும் 'தோனி' பட நாயகி கியாரா பாலிவுட்
    மனைவியை இரண்டாவது முறையாக திருமணம் செய்யும் ஹர்திக் பாண்டியா!! கிரிக்கெட்
    ஜப்பானில் பரவிவரும் வார இறுதி திருமணங்கள் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? உறவுகள்

    தெலுங்கு திரையுலகம்

    அல்லு அர்ஜுனின் புஷ்பா 2 வெளியீடு தள்ளிவைக்கப்பட்டது; புதிய தேதி அறிவிப்பு அல்லு அர்ஜுன்
    சிரஞ்சீவியின் முன்னாள் மருமகன் சிரிஷ் பரத்வாஜ் உடல்நலக் குறைவால் காலமானார் தெலுங்கு படங்கள்
    வயதான ரசிகரை கீழே தள்ளிய நடிகர் நாகர்ஜூனாவின் பாதுகாவலர்; மன்னிப்பு கேட்ட நடிகர் தனுஷ்
     'கல்கி 2898 கி.பி' படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் கடும் சரிவு  பிரபாஸ்

    தெலுங்கு படங்கள்

    #AK63 திரைப்படத்தை இயக்கும் ஆதிக் ரவிச்சந்திரன்- உறுதிப்படுத்திய அஜித்தின் மேலாளர் நடிகர் அஜித்
    விரைவில் திருமண அறிவிப்பை வெளியிட போகும் விஜய் தேவாரகொண்டா-ரஷ்மிகா ஜோடி ரஷ்மிகா மந்தனா
    தள்ளிப்போகும் அயலான் ரிலீஸ்; ரசிகர்கள் அதிர்ச்சி  சிவகார்த்திகேயன்
    தனுஷ், நாகார்ஜுனா, சேகர் கம்முலா, இணையும் DNS: பூஜையுடன் தொடக்கம் தனுஷ்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025