Page Loader
தம்பி கார்த்தியை தொடர்ந்து அண்ணன் சூர்யாவிற்கு ஜோடியாகிறார் அதிதி ஷங்கர் 
சூர்யாவிற்கு ஜோடியாகிறார் அதிதி ஷங்கர்

தம்பி கார்த்தியை தொடர்ந்து அண்ணன் சூர்யாவிற்கு ஜோடியாகிறார் அதிதி ஷங்கர் 

எழுதியவர் Venkatalakshmi V
Aug 22, 2023
09:09 am

செய்தி முன்னோட்டம்

இயக்குனர் ஷங்கரின் இளைய மகள் அதிதி ஷங்கர், இரு படங்களே நடித்திருந்தாலும், தனது துருதுரு நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். கார்த்தியுடன் அவர் நடித்த முதல் படமான 'விருமன்'-இல், அவர் அபார நடிப்பை வெளிப்படுத்தினார் என பலரும் புகழ்ந்தனர். அந்த திரைப்படம் வெளியாகும் முன்னரே, அவர் சிவகார்த்திகேயனுடன், 'மாவீரன்' என தனது இரண்டாம் படத்திற்கு ஒப்பந்தமானார். 'விருமன்' படத்தை சூர்யாவின் '2D என்டர்டைன்மெண்ட்' நிறுவனம் தயாரித்திருந்தது. அப்போது ஒரு சில பேட்டியில், நடிகர் சூர்யாவுடன் நடிக்க வேண்டும் என தான் விரும்புவதாகவும் அதிதி கூறியிருந்தார். இந்நிலையில், 'சூர்யா- 43' திரைப்படத்திற்கு அவரை ஒப்பந்தம் செய்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அந்த திரைப்படத்தை, இயக்குனர் சுதா கொங்கரா இயக்க, GV பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

ட்விட்டர் அஞ்சல்

சூர்யாவுடன் அதிதி ஷங்கர்